ரோல்பிளே உடலுறவு மூலம் உறவில் புதுமையை பேணும் காதலர்கள்..!!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 6:29 PM IST

உடலுறவு சார்ந்த விஷயங்களில் பலரும் ஆக்கத்திறனுடன் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ‘ரோல்பிளே செக்ஸில்’ ஈடுபடக்கூடியவர்களாக இருப்பார்கள். இதன்மூலம் உறவும் உடலும் உணர்வு திருப்தி அடையும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது.
 


பாலுறவில் பல்வேறு முறைகள் உள்ளன. அதில் ஆக்கத்திறன் கொண்டதும் உணர்வுகளை வெளியிடுவதற்கு போதுமானதாக இருக்கக்கூடியது தான் ரோல்பிளே. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், பல்வேறு காதலர்கள் தம்பதிகளுக்கு உறவு நீடித்திருக்க ரோல்பிளே செக்ஸ் மிகவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உறவுகொள்ளும் முன், ஆணும் பெண்ணும் கலந்துபேசி ஒரு கதையை உருவாக்க வேண்டும். அதில் வரும் கற்பனை கதாபாத்திரங்களாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் இரண்டு பேரும் தங்களுக்குப் பிடித்த பாத்திரத்தை ஏற்று, அந்நியர்களைப் போல நடந்துகொண்டு கடைசியில் உடலுறவு கொள்கிறார்கள். இந்த ரோல்பிளே செக்ஸ் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் காதலர்களிடையே பிரபலமாக இருக்கும் ரோல்பிளே கதாபாத்திரங்கள் மற்றும் கதையை குறித்து தெரிந்துகொள்வோம்.

ஆணுறையை விட கருத்தடைக்கு 95 வரை பலன் தரும் பெண்ணுறைகள்..!!

Tap to resize

Latest Videos

undefined

பேராசிரியரும் மாணவரும்

ரோல்பிளே என்றதும் பலரின் விருப்பமான கற்பனைகளில் ஒன்றாக பேராசிரியர், மாணவருக்கு இடையேயான காதல் வந்துபோகும். அது வெறும் கற்பனையில் மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் பலரும் இந்த கதாபாத்திரங்களை முயற்சிக்கின்றனர். இதில், நீங்களும் உங்கள் துணையும் பேராசிரியராகவும் மாணவராகவும் செயல்பட வேண்டும். இதற்கு காரணம் கல்லூரி நாட்களில் பலருக்கும் பேராசிரியர் மீது கிரெஷ் ஏற்படுவதே ஆகும்.

பிளம்பரும் வீட்டு உரிமையாளரும்

பெண்களுக்கு இருக்கும் கற்பனைகளில் இதுவும் முக்கியமான கதாபாத்திரங்களாகும். ஒரு பிளம்பர் ஒரு வீட்டிற்கு ஏதாவது பழுதுபார்க்க வருகிறார். ஆனால், அவரைப் பார்த்ததும் பெண்கள் காதல் வயப்படுவார். இதனால் இருவரும் உலகையே மறந்து ரொமான்ஸ் செய்வார்கள். இதுபோன்று சினிமாக்களில் அதிகமாக காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதைத்தான் நிஜ வாழ்க்கையிலும் பலரும் விரும்புகின்றனர்.

ஆண்குறி சிறியதாக இருப்பதாக நினைத்து கவலைப்படும் ஆண்களே, பெண்கள் சொல்வதை கேளுங்கள்..!!

முன்பின் தெரியாதவரும் பெண்ணும்

நாம் முன்னே பார்த்த கதைகள் சராசரியாக பெரும்பாலான காதலர்கள் விரும்பக்கூடிய ரோல்பிளே தான். ஆனால் தற்போதைய நவநாகரீக உலகுடன் நெருங்கி வாழும் தம்பதிகள் அல்லது காதலர்கள், வெளியாட்கள் போன்று நடந்துகொண்டு உறவுகொள்ள விரும்புகின்றனர். ஏதோ பொது இடத்தில் இருவரும் பார்த்துக் கொண்டவாரு நினைத்துக் கொண்டு, அதன்மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, இறுதியாக உடலுறவுகொள்வார்கள். 

ரோல்பிளே செக்ஸில் ஈடுபவது தம்பதிகளுக்கு புத்துணர்வை தருகிறது. தங்களை மற்றவராக பாவித்துக்கொண்டு காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம், அந்த உறவும் புதியதாக தெரிகிறது. இதன்மூலம் திருமண வாழ்க்கை சலிப்பில்லாமல் புத்துணர்வுடன் செல்வதாக பலரும் நம்புகின்றனர். இதனால் பலரும் ரோல்பிளே கொண்டு உறவில் ஈடுபடுகின்றனர்.  

click me!