நமக்குள் பாலுறவு மீதான உணர்வு உருவானதில் இருந்து, உடலுறவு சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். எனினும் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதுகுறித்து பார்க்கலாம்.
முதன்முதலாக உடலுறவு என்பது சிலருக்கு திருமணத்துக்கு முன், சிலருக்கு திருமணத்துக்கு பின் ஏற்படுகிறது. நீங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் நபருக்கும், அதுதான் முதல் அனுபவம் என்றால் அது சிக்கலாகவே முடிய வாய்ப்புள்ளது. இன்றைய காலத்தில் முதன்முதலாக பாலுறவில் ஈடுபடுபவர்கள் தான் பெரும்பாலானவர்கள் தங்களுடைய முதல் அனுபவம் பெறுகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் யாருக்கும் பாலுறவு சார்ந்த உரிய தகவல்கள் கிடைக்காது. அதுதான் பாலுறவு என்று நம்பி, தங்களுடைய அடுத்தடுத்த மகிழ்ச்சியையும் அனுபவிக்கின்றனர். ஆனால் முதன்முதலாக உடலுறவு கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதை தெரிந்துகொண்டால் உங்களுடைய பாலியல் அனுபவம் முழுமை அடையும். பாதுகாப்பான உடலுறவு சார்ந்த முனைப்புடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
பாலுறவு முழுமை அடைய வேண்டும்
முதன்முதலாக பாலுறவு அனுபவம் ஏற்படுவது என்றால், அது ஆபாச வீடியோக்கள் வழியாகத்தான். காட்சிகளை நேரில் பார்த்துவிடுவதால், உடலுறவு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். ஆனால் அது உண்மையாக நேரும் போது பதற்றம் வந்துவிடும். உடலுறவை நினைத்து, படுக்கையை பகிர்ந்துகொள்ளும் நபரை நினைத்து, உடலுறவு முழுமை பெறுவதை நினைத்து, தன்னைப்பற்றி நினைத்து, இப்படி பல்வேறு வகையில் பதற்றம் சந்திக்கத் தூண்டும். இப்படிப்பட்ட சந்தேகங்களுடன் படுக்கையில் இருக்கும் போது, ஒருவேளை உங்களுடைய துணை சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுக்கு திருப்தி கிடைக்காமல் போய்விடக்கூடும். உடலுறவு கொள்ளும் போது, அதுசார்ந்த உணர்வுக்கு தான் மதிப்பளிக்க வேண்டும். பிறர் தொடுதல், அதுசார்ந்த இணக்கம், அதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இடம்கொடுத்து அனுபவிக்க வேண்டும்.
உடல் தேவையை அறிய வேண்டும்
ஒவ்வொருவருக்கும் உடல் தேவை என்பது மாறும். அதுசார்ந்து நீங்கள் முடிவு செய்ய வேண்டும். பலருக்கும் படுக்கைக்கு போகும் வரை, உடலுறவில் தனக்கு என்ன தேவை என்பது தெரியாமல் உள்ளது. தனது உடல் சார்ந்த புரிதல் பலருக்கும் கிடையாது என்பதே உண்மை. ஒருவேளை உங்களுடைய துணை, உங்களை காதலுடன் தொடும்போது அது அசவுகரியத்தை தரலாம். எனவே, உங்களுடைய எல்லை என்ன? தேவை என்ன? என்பதை முன்னரே முடிவு செய்துவிடுவது நல்லது.
உங்களுடைய பாலியல் வாழ்க்கை இன்பமாக இல்லையா..? இந்த 5 பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்..!!
உணர்வுகளும் இடமாறுகின்றன
முதன்முதலாக நாம் உடலுறவில் ஈடுபடுவது வாழ்நாள் முழுவதும் மறக்காது. அதனால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்துகொள்ளுங்கள். ஆபாசப் படங்கள் பார்ப்பதன் காரணமாகவோ, சமூக அழுத்தம் காரணமாகவோ, குழப்பமான மனநிலை காரணமாகவோ உடலுறவில் ஈடுபடக் கூடாது. பார்டன்ருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் போது மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இடைவெளி விட்டு உறவுகொள்ளுங்கள், அவசரகதியில் எதையும் செய்ய வேண்டும், இருவருக்கும் பிடித்த பாலியல் முன்விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் முக்கியம். இதுதான் உடலுறவு சார்ந்த அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும். அதன்மூலம் அந்த அனுபவத்தை நாம் காலத்துக்கும் நினைவுகொள்ளலாம்.
சுயக்கட்டுப்பாடு அவசியம்
எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் சுயக்கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது. ஆபாசப் படங்களில் பார்த்தேன் என்று கூறிவிட்டு, உச்சம் அடையும் போது துணையை இழிவாக பேசுவது, துணையின் விருப்பதை புரிந்துகொள்ளாமல் செயல்படுவது, குறிப்பிட்ட பாலியல் முன்விளையாட்டில் ஈடுபடுவதற்கு துணையை விருப்பபில்லாமல் கட்டாயப்படுத்துவது, பாலியல் உடலுறவுக்காக துணையை தொந்தரவுப்படுத்துவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். உடலுறவு என்பது இருவரும் சம்மந்தப்பட்ட விஷயம். அதனால் இருவருடைய கருத்துக்கும் அங்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை சில விஷயங்களில் பார்டனருக்கு குழப்பம் இருந்தால், அதை பக்குவமாக தெளிவுப்படுத்தி பாலியல் உடலுறவில் ஈடுபடுங்கள்.