தவறாக பயன்படுத்தப்பட்ட பாலியல் சார்ந்த 5 சொற்கள்..!!

By Dinesh TG  |  First Published Feb 2, 2023, 10:18 PM IST

இந்தியாவில் பாலியல் கல்வி என்பது அரிதானது என்பது மறுக்க முடியாத உண்மை. பல விஷயங்கள் மாறிவிட்டாலும் கல்விநிலையங்களில் இன்னும் இது மாறவில்லை. இதனால் பாலியல் குறித்து தவறான புரிதல்கள் மற்றும் பல பாலியல் சொற்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் பாலியல் சார்ந்து தவறாக புரிந்துகொள்ளப்பட்ட 5 சொற்கள் மற்றும் அதற்கான உண்மையான பொருள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
 


அனைத்துப்பாலீன ஈர்ப்பு (Pansexual)

எல்லாவிதமான மக்களுடன் பாலீர்ப்பு கொண்டவர்கள் தான் அனைத்துப்பாலீர்ப்பினர். இவர்களுக்கு அனைத்து பாலின மக்களிடமும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஈர்ப்பு இருக்கும். பான் என்பது "எல்லாவற்றையும் உள்ளடக்கியது" என்பதைக் குறிக்கிறது. ஆனால் சிலர் இன்னும் இருபால் உறவை தான் பான்செக்சுவல் வார்த்தை குறிப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இருபாலீர்ப்பு என்பது முற்றிலும் வேறு.

Tap to resize

Latest Videos

undefined

சிறப்பியல்பு சார்ந்த பாலீர்ப்பு

இந்த சொல் பாலியல் ஈர்ப்பின் ஒரு வடிவத்தை விவரிக்கிறது, இதில் ஒரு நபர் உணர்ச்சி ரீதியாக நெருக்கமாக இருக்கும் நபர்களிடம் மட்டுமே ஈர்க்கப்படுகிறார். இது ஒரு தனித்துவமான பாலியல் நோக்குநிலை அல்ல, ஆனால் ஒரு நபரின் அடையாளத்திற்கான கூடுதல் அம்சமாகும். இது ஆண் பெண் உறவிலும் இருக்கலாம் அல்லது ஓரினச்சேரிக்கையாளர்கள் மத்தியிலும் இருக்கலாம். குறிப்பிட்ட ஒருவருடைய சிறப்பியல்பினால் கவரப்பட்டு, அவர்கள் மீது ஈர்ப்பு கொண்டவர்களுக்கு பாலின விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். 

கின்க்

கின்க் என்ற வார்த்தை, சாட்டையடி, அடித்தல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பி.டி.எஸ்.எம் பாலியல் நடைமுறைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.  இருப்பினும், இந்த வார்த்தை சமூக "விதிமுறையில்" இருந்து விலகிய பாலியல் செயல்பாடாக பார்க்கப்படுகிறது. “50 ஷேட்ஸ்…” போன்ற திரைப்படங்களால் கின்கினெஸ் பாலியல் நடைமுறை பலருக்கும் தெரியவந்துள்ளது. அதனால் இதுசார்ந்த பாலீர்ப்பு நடைமுறை பலரிடையே பிரபலமடைந்து வருகிறது. 

காபியில் பால் சேர்ப்பது நல்லதா? அப்படி குடிக்கலாமா?

வுல்வா

”யோனி" என்ற வார்த்தை பெரும்பாலும் முழு பெண்ணின் பிறப்புறுப்பையும் குறிப்பதாக பலரும் எண்ணுகின்றனர். ஆனால் யோனி பென்ணுறுப்பின் கருவாயை மட்டுமே குறிக்கிறது. ஆனால் வுல்வா என்ற வார்த்தை பெண் பிறப்புறுப்பின் வெளிப்புற பாகங்களைக் குறிக்கிறது. இதில் பெண்குறிமூலம், லேபியா மற்றும் யோனி திறப்பு ஆகியவை அடங்கும். சுமார் 70% பெண்களுக்கு தங்கள் பிறப்புறுப்பு எங்கிருப்பதாக தெரியவில்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பாலிமரி

ஒரே நேரத்தில் பல காதல் உறவுகளில் ஈடுபடுவது தான் பாலிமரி என்று கூறப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்ட அனைவரும் சம்மதத்துடன் காதல் உறவில் இருப்பார்கள். இது ஓப்பன் ரிலேஷன்ஷிப் கிடையாது. அனைவரும் ஒன்றாக உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைந்து வாழ்வது கூட பாலிமரி வாழ்க்கை தான்.

click me!