Sex Drive : சீஸ், சாக்லேட் சாப்பிட்டால் அவ்வளவு தான்- உள்ளதும் போய்விடும்..!!

By Dinesh TG  |  First Published Dec 25, 2022, 12:57 PM IST

பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில உணவுப் பழக்கங்கள் உதவி செய்கின்றன. அதேபோன்று குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. அந்த உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.


உணவு சாப்பிடுவது குறித்தும் உணவு முறை சார்ந்த வாழ்க்கையும் மிகவும் முக்கியம் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால் நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் உணவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதன்காரணமாக தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அந்த வகையில் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில உணவுப் பழக்கங்கள் உதவி செய்கின்றன. அதேபோன்று குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. அந்த உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மது

Tap to resize

Latest Videos

undefined

பலரும் பாலியல் செயல்பாட்டுக்கு ஈடுபடுவதற்கு முன்னர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மது சாப்பிட்டு காதலில் ஈடுபட்டால் உடலுறவு வெற்றிகரமாக நடக்கும் என்பது அவர்களுக்கு நம்பிக்கையாக உள்ளது. ஆனால் உண்மையில் அதற்கு எதிரான நிலையை தான் உடல் அடைகிறது. உடலின் அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பாலியல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஆனால் மது அருந்துவிட்டு காதலில் ஈடுபடும் போது, அது உடல் உறுப்புகளை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் உங்களுக்கு சிறப்பாக தெரிந்தாலும், அதனுடைய பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகே தெரியவரும். மது அருந்துவிட்டு காதல் செய்பவர்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பு மற்றும் ரத்த சுத்திகரிப்பு போன்றவற்றில் பிரச்னை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சீஸ்

பார்ப்பதற்கு அழகாகவும், சுவையாவும், சாப்பிடுவதற்கு சூப்பராகவும் இருக்கும் சீஸ் சிறப்பான ஆர்காசம் வழங்கும்  உணவு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. தமிழில் பாலாடைக் கட்டி என்று கூறப்படும் சீஸ், பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாகவே பாலில் ஸின்தட்டிக் ஹார்மோன்கள் காணப்படுகின்றன. இது உடலிலுள்ள ஹார்மோன்களுடன் இணையும் போது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாலியல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

சாக்லேட்ஸ்

இந்த வார்த்தையை கேட்டுவிட்டு இப்பதிவை படிக்க தொடங்குபவர்களுக்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். உண்மையில் சாக்லேட் சாப்பிடுவதும் பாலியல் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது. அறிவியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும், அதாவது சாக்லேட்டுகளில் ஆக்சிடாக்ஸின் என்கிற மூலப்பொருள் உள்ளது. இது டெஸ்ட்ரோஸ்ட்ரோன் அளவுகளை மட்டுப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுகள் சாப்பிடுபவர்களுக்கு செக்ஸ் ட்ரைவ் என்பது பாதிக்கப்படுகிறது.

சுய இன்பம் காணும் போது பிறப்புறுப்பில் ரத்தக் கசிவா? ஆண்களே உஷார்..!!

வறுத்த உணவுகள்

இனிமேல் நீங்கள் டேட்டிங் செல்லும் போது வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். பொதுவாக ஹைட்ரோஜேனிடேட் எண்ணெய்கள் கொண்டு தான் பெரும்பாலான கடைகளில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு பொறித்த மோமோக்கள், பொறித்த உருளைக் கிழங்கு சிப்ஸுகளும் விதிவிலக்கல்ல. அதனால் இனிமேல் டேட்டிங் செல்பவர்கள் உணவுகளை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இதுபோன்ற எண்ணெய்கள் கொண்டு சமைக்கப்படும் உணவுகளால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் அளவு பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களுடைய பாலியல் செயல்பாடு திருப்தி அளிக்காமல் போய்விடுகிறது.

புதினா

இந்தியாவில் மூலிகை நிறைந்த பயன்களை தரும் இலைகளில் புதினா முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால் இதன் காரணமாகவும் ஒருவருடைய பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. உடல் மற்றும் வாயில் புத்துணர்வை ஏற்படுத்துவதற்கு புதினா பலராலும் சாப்பிடப்படுகிறது. ஆனால் இதை சாப்பிட்டு காதலில் ஈடுபடுபவர்கள் மிகவும் கடினமான நேரத்தை சந்திக நேரிடுகிறது ,
 

click me!