WhatsApp மூலம் போனின் வேகத்தை அதிகரிக்க முடியும்; எப்படி தெரியுமா? முழு விவரம்!

First Published | Jan 3, 2025, 3:40 PM IST

ஸ்மார்ட்போன்கள் திடீரென மெதுவாக இயங்க ஆரம்பிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் போன் WhatsApp மூலம் போன்களை வேகமாக செயல்பட வைக்க முடியும். அது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

ஸ்மார்ட்போனில் அதிக ஆப்கள் இருந்தால் வேகம் குறையும். இதேபோல் பைல்ஸ்க்ள் அதிகரித்தாலும் வேகம் குறையலாம். மேலும் தேவையற்ற ஆப்கள், பயன்படுத்தாத ஆப்கள் இருந்தாலும் பிரச்சனைக்கு வழிவகுக்கும். போன் வேகம் குறைய வாட்ஸ்அப்பும் ஒரு காரணம். WhatsApp எப்படி போன் வேகத்தைக் குறைக்கிறது?

செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் வைத்துள்ளனர். எந்த நிறுவனத்தின் மொபைல் ஆனாலும் WhatsApp இருக்கும். இதன் பயன்பாடு மிக அதிகம். எந்த நிறுவன போன் ஆனாலும் WhatsAppக்கு அதிக ஸ்டோரேஜ் கொடுக்கும். WhatsAppஐ பயன்படுத்திக் கொண்டே இருந்தால் ஸ்டோரேஜ் நிரம்பி போன் மெதுவாக வாய்ப்புள்ளது.

Tap to resize

வாட்ஸ்அப் செட்டிங்கில் 'ஸ்டோரேஜ் & டேட்டா' ஆப்ஷன் உள்ளது. வாட்ஸ்அப் எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்துகிறது என்பதை இதன்மூலம் அறியலாம். எந்த சாட் மூலம் எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்கலாம். நீங்கள் யாருடன் அதிக டேட்டாவைப் பகிர்ந்துள்ளீர்கள், எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

1. WhatsAppஐ ஓப்பன் செய்து மேலே 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். 

2. செட்டிங்ஸைத் (settings) திறந்து ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா  (storage and data) என்பதை ஓப்பன் செய்யவும், 

3. அங்கு மேனேஜ் ஸ்டோரேஜ் (manage storage) என்பதை கிளிக் செய்யவும்.

4. WhatsApp எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளது? எவ்வளவு இடம் காலியாக உள்ளது? சாட்களுக்கு எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளீர்கள்? என்பது தெரியவரும்.

5. இப்போது தேவையற்ற டேட்டாவை நீக்கவும். ஸ்டோரேஜ் காலியாகும். இதன்மூலம்  போன் வேகமும் அதிகரிக்கும்.

WhatsApp ஸ்டோரேஜ் நிரம்ப இன்னொரு காரணம் ‘மீடியா தெரிவுநிலை’. இந்த விருப்பம் ஆன் செய்திருந்தால் WhatsAppல் வரும் புகைப்படம், வீடியோக்கள் கேலரியில் சேமிக்கப்படும். இதனால் போன் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பிவிடும்.

1. இதை ஆஃப் செய்ய WhatsAppல் சாட் ஆப்ஷனை ஓப்பன் செய்து மேலே உள்ள 3 புள்ளிகளைக் கிளிக் செய்யவும். 

2. ‘தொடர்பைப் பார்’ அல்லது ‘குழு தகவல்’ என்பதைக் கிளிக் செய்யவும். 

3. அங்கு ‘மீடியா தெரிவுநிலை’ என்பதைக் கிளிக் செய்யவும். 

4. இந்த விருப்பம் ஆன் செய்திருந்தால் ஆஃப் செய்யவும். இனி WhatsAppக்கு வரும் புகைப்படம், வீடியோக்கள் கேலரியில் சேமிக்கப்படாது.  இதனால் உங்கள் போன் மெமரி சேமிக்கப்படும். போனும் வேகமாக வேலை செய்யும்.

Latest Videos

click me!