உச்சத்தைத் தொட்ட UPI பேமெண்ட்! 16.5 பில்லியனைத் தாண்டி புதிய சாதனை!

First Published | Dec 26, 2024, 8:40 PM IST

16.5 billion UPI transactions: 2024ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா இயக்கம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. UPI பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைத்திருப்பதால் அவை இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளன. இந்த ஆண்டில் 16.5 பில்லியனுக்கும் மேற்பட்ட UPI பேமெண்டுகள் நடந்துள்ளன.

2024 இந்தியாவிற்கு ஒரு முக்கிய ஆண்டாக அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் வரலாற்று சாதனைகள் நிகழ்ந்துள்ளன. பிரதமரின் விக்சித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் பயணம் செய்கிறது.

2024ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா இயக்கம் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. UPI பரிவர்த்தனைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன. 16.5 பில்லியன், அதாவது 1650 கோடிக்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் இந்த ஆண்டில் நடந்துள்ளன.

Tap to resize

இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களில் ஆஃப்லைனில் UPI பேமெண்ட் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. *99# என்ற அதிகாரபூர்வ USSD குறியீட்டை டயல் செய்து, UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம். இந்த சேவையை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) செயல்படுத்துவதால் முற்றிலும் பாதுகாப்புகவும் இருக்கும்.

UPI

UPI 123Pay மற்றும் UPI Lite மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளையும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்துள்ளது. UPI 123Pay மூலம் இப்போது ரூ.10,000 வரை அனுப்பலாம். UPI Lite வாலட் மூலம் ரூ.5,000 வரை செலவு செய்யலாம்.

இப்போது வங்கிக் கணக்கு இல்லாமல் கூட UPI முறையில் பணம் செலுத்தலாம். இந்த அம்சத்தின் உதவியுடன் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இணைக்காமலே  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும். Google Pay செயலியில் உள்ள யுபிஐ சர்க்கிள் (UPI Circle) என்ற இந்த அம்சமும் UPI பரிவர்த்தனைகள் அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது.

Latest Videos

click me!