காற்றின் தரத்தை அறிந்துகொள்ள கூகுள் மேப்பில் புதிய வசதி Air View+!

First Published | Nov 21, 2024, 9:16 AM IST

அரசாங்க அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்க Air View+ என்ற புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Maps Air View+

அரசாங்க அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்க Air View+ என்ற புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த புதிய அம்சம் வந்துள்ளது. 

Google Maps Air View+

காற்று மாசுபாடு பல சுகாதார சவால்களுக்கு இட்டுச் சென்றாலும், காற்றின் தரம் குறித்த தரவுகள் ஹைப்பர்லோகல் அளவில் இல்லாததால் நடவடிக்கை எடுக்கும் திறன் குறைவாகவே உள்ளது. உள்ளூர் காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், காலநிலை செயல்பாட்டுக் குழுக்கள், பெருநிறுவனங்கள், நகர நிர்வாக அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் கூட்டாக ஒத்துழைப்பதன் மூலம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள கூகுள் Air View+ அம்சம் பயன்படும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Google Maps Air View+

Aurasure மற்றும் Respirer Living Sciences போன்ற காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் காற்றின் தரத்தை கண்காணிக்க தேவையான உள்கட்டமைப்பு இல்லாத நகரங்களில் காற்றின் தர சென்சார் நெட்வொர்க்கை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன என்று கூகுகள் கூறியுள்ளது. இந்த சென்சார்கள் ஒவ்வொரு நிமிடமும் காற்றின் தர அளவீடுகளை வழங்குகின்றன. இந்த சென்சார்கள் 150க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றன. 

Air pollution

ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், CSTEP போன்ற காலநிலை நடவடிக்கை குழுக்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆதரவுடன் இந்த சென்சார்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்று கூகுள் கூறியுள்ளது. காற்றின் தர அளவீடுகளை விரைவாகக் கணக்கிட Google AI ஐப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் கூகிள் தெரிவித்துள்ளது. 

Google AI

Google AI மூலம் இயக்கப்படும் Air View+ அம்சம், இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு கூகுள் மேப்பில் உடனுக்குடன் ஹைப்பர்லோகல் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்குகிறது. மேலும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடலுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்களுக்கும் இந்த காற்றின் தர அளவீடுகள் பயன்படுகின்றன.

Latest Videos

click me!