Airtel revised prepaid plans
ஏர்டெல் அதன் இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திருத்தியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) சமீபத்திய உத்தரவுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட இரண்டு பிளான்களும் வாயஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் பலன்களை வழங்குபவையாக மாறியுள்ளன. டேட்டா சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
Airtel 509 Plan
ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பழைய பலன்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இது இப்போது மொபைல் டேட்டா பலன்கள் இல்லாதது. குரல் அழைப்புகள் மற்றும் அதிக எஸ்எம்எஸ் நன்மைகள் தேவைப்படும் பயனர்களுக்கு பயன்படும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 SMS இதில் வழங்கப்படுகின்றன.
Airtel 569 Plan
முன்னதாக, இந்த திட்டத்தில் 6GB டேட்டாவும் இருந்தது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட பேக் அதை நீக்கியுள்ளது. ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் சலுகைகளைப் பெறுவார்கள். குறைவாக டேட்டா தேவைப்படுபவர்கள் ரூ.569 க்கு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கலாம். இதில் 6GB மொபைல் டேட்டாவுடன் அதே வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் கிடைக்கும்.
Airtel prepaid plans
திருத்தப்பட்ட இரண்டாவது ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.1,999 க்கான வருடாந்திர பேக். அன்லிமிட்டட் வாய்ஸ் கால், 3,000 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. முன்பு இத்துடன் கிடைத்த 24 GB மொபைல் டேட்டா இப்போது அகற்றப்பட்டுவிட்டது. இந்தத் திட்டத்தின் பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் சேவைகளை இப்போதும் பெறலாம்.
Airtel Revised Plans
வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்காக ஆபரேட்டர்கள் STVகளை வழங்க வேண்டும் என்று டிராய் (TRAI) உத்தரவிட்டதை அடுத்து, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஏர்டெல் திட்டங்கள், போன் கால் செய்யவும் எஸ்எம்எஸ் அனுப்பவும் வசதிகளை வழங்கும் அதே வேளையில், குறைவான டேட்டாவை வழங்குகின்றன.
Airtel News
ரூ.509 மற்றும் ரூ.569 பேக்குகளை பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் தனி டேட்டா பேக்குகளை வாங்க வேண்டும். அதற்குப் பதிலாக அன்லிமிட்டட் டேட்டா வழங்கும் மற்ற பிளானை தேர்ந்தெடுக்கலாம். இலவச வரம்பைத் தாண்டிய பிறகு எஸ்எம்எஸ் கட்டணம் லோக்கலுக்கு ரூ.1 ஆகவும், எஸ்டிடிக்கு ரூ.1.5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.