மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை..! புகைப்பட தொகுப்பு..!
First Published | Nov 25, 2020, 2:35 PM ISTவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும், நிவர் புயல் உள்ளது.
இந்தப் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னை, நாகை, தஞ்சை, புதுவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.
புயல் கரையை கடக்கும் முன்னரே... சென்னை நகரம் மழையில் தத்தளித்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...