கிரிக்கெட் வீரர்களை ஓவர்டேக் செய்த மனு பாக்கர், நீரஜ் சோப்ரா – கோடிக்கணக்கில் உயர்ந்த பிராண்ட் மதிப்பு!

First Published | Aug 23, 2024, 8:54 PM IST

Neeraj Chopra-Manu Bhaker Brand Value: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இல் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை வென்றது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது.
 

நீரஜ் சோப்ரா-மனு பாக்கர் பிராண்ட் மதிப்பு

Neeraj Chopra-Manu Bhaker Brand Value: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக் தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீர்ர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது. நீரஜின் பிராண்ட் மதிப்பு பல கிரிக்கெட் வீரர்களின் பிராண்ட் மதிப்பை விட அதிகமாக உள்ளது.

Neeraj Chopra Brand Value

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்ததைத் தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் பிராண்ட் மதிப்பு ரூ.330 கோடியை எட்டியுள்ளது. இது கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் பிராண்ட் மதிப்புக்கு சமம். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஒரு விளம்பரத்திற்கு ரூ.3 கோடி வாங்கி வந்த நிலையில், தற்போது நீரஜ் சோப்ரா ரூ.4 கோடி முதல் ரூ.4.50 கோடி வரை பெறுகிறார். 

Tap to resize

Manu Bhaker Brand Value

இதே போன்று ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான துப்பாக்கி சுடும் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பும் அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு ஒரு விளம்பரத்திற்கு ரூ.25 லட்சம் பெற்ற மனு பாக்கர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு தனது பிராண்ட் மதிப்பை ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடியாக உயர்த்தியுள்ளார். இருப்பினும், விளம்பரங்களுக்காக ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மனு பாக்கரை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Vinesh Phogat Brand Value

அதேபோல், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லாத போதிலும் இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற வினேஷ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு ஒரு விளம்பரத்திற்கு ரூ.25 லட்சம் பெற்று வந்தார். இருப்பினும், தற்போது ஒரு விளம்பரத்திற்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Vinesh Phogat Brand Value

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மொத்தம் 6 பதக்கங்களை வென்றது. இதில் துப்பாக்கி சுடும் பிரிவில் மனு பாக்கர், மனு-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அமன் செராவத் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல், துப்பாக்கி சுடும் பிரிவில் ஸ்வப்னில் குசாலேவும் வெண்கலப் பதக்கம் வென்றார். 

Latest Videos

click me!