R Praggnanandhaa
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவிற்கு முதல் முறையாக தங்கப் பதக்கம் கொண்டு வந்த தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா, தனக்கு ஆதரவாக இருப்பது கௌதம் அதானி சார் தான் என்றும், அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்றது.
R Vaishali-R Praggnanandhaa
இதில் இந்தியா சார்பில் அர்ஜூன் எரிகைசி, ஆர் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, குகேஷ் தொம்மராஜூ, ஸ்ரீநாத் நாராயணன், ஆர் வைஷாலி ரமேஷ் பாபு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொடரில் இந்தியா ஆண்களுக்கான பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்திருந்தது. கடைசி சுற்று போட்டியில் இந்தியா, சுலோவேனியா உடன் மோதியது.
2024 FIDE Chess Olympiad
இந்த சுற்று போட்டியில் இந்தியாவின் டி குகேஷ், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இதே போன்று மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆர் பிரக்ஞானந்தா ரஷ்யாவின் ஆண்டன் டெம்சென்கோ உடன் மோதினார். எனினும், இந்த போட்டியில் கடைசியில் பிரக்ஞானந்தா தான் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார்.
R Praggnanandhaa Wins Gold For India
இதே போன்று கடைசி போட்டியில் இந்தியாவின் விதித் குஜராத்தி செபேனிக் மாடேஜுடன் மோதினார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இறுதியாக இந்திய அணி 11 சுற்றுகள் முடிவில் 21 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக கடந்த 2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களைப் போன்று மகளிரிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்தது. இதில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி விளையாடிய போட்டி டிராவில் முடிந்தது. எனினும், இந்த தொடரில் முதல் முறையாக தங்கம் வென்றது. இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
R Praggnanandhaa and Adani Group
இந்த நிலையில் தான் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா கூறுகையில், எனது பெற்றோரில் ஆரம்பித்து எனக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பட்டியலில் ஏராளமானோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பயிற்சியாளர்கள், முதல் ஸ்பான்சர், ராம்கோ குழு என்று பலரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
தற்போது கடந்த ஒரு வருடமாக அதானி குழுமம் தனக்கு ஆதரவளித்து வருகிறது. ஆதலால் அதானி குழுமத்திற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கௌதம் அதானி சாரை சந்தித்ததாக கூறிய பிரக்ஞானந்தா இந்த ஆண்டு இந்தியாவிற்காக தங்கம் வெல்ல வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், கௌதம் அதானி சாரின் ஆதரவிற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.