நியூசி.யிடம் படுதோல்வி: WTC பைனலுக்கு செல்வதில் இந்தியாவுக்கு சிக்கல்

First Published | Nov 3, 2024, 5:25 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து பார்ப்போம்.

Ind Vs NZ

அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணியை கடினமான சூழலிலும் போராடி இந்தியா வெற்றி பெற்றது. குறிப்பாக ஒரு போட்டி வெறும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், அதிலும் இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. மற்றொரு திசையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலை தாக்குபிடிக்க முடியாமல் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

Ind Vs NZ

இந்த இரண்டு சூழலையும் பொறுத்திப்பார்த்த இந்திய ரசிகர்கள், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியை இந்தியா 3 போட்டிகளிலுமே அபார வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும் என்று கணக்கு போட்டனர். ஆனால் நியூசிலாந்து அணி இந்தியாவில் கால் வைத்ததும் சீனே வேறு என்பது போல் மொத்த ஆட்டமும் மாறியது. முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா நிச்சயமாக தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பினர்.

Tap to resize

Ind Vs NZ

ஆனால் இரண்டாவது போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. 3வது போட்டியிலாவது இந்தியா ஆறுதல் வெற்றி பெறும் என்று நினைத்த ரசிகர்களுக்கு இந்திய அணி ஏமாற்றத்தை அளித்தது. எளிதில் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் 3 அல்லது அதற்கு அதிகமான போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் வொயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.

Ind Vs NZ

3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் வெற்றி சதவீதம் படுமோசமாகக் குறைந்துள்ளது. 62 சதவீத புள்ளிகளுடன் இருந்த இந்தியா தற்போது 58.33 சதவீத புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக இலங்கை 55 சதவீத புள்ளிகளுடனும், தென்னாப்பிரிகா 54 சதவீத புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Ind Vs NZ

இந்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்கும் பட்சத்தில் 53 சதவீத புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு தள்ளப்படும். இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும். மாறாக ஒரு போட்டியில் தோல்வி பெற்றால் கூட பிற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Videos

click me!