வழக்கமான உடலுறவால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமாம்.. என்னென்ன தெரியுமா?

First Published | Jul 21, 2023, 1:58 PM IST

உடலுறவு என்பது உடல் இன்பம் மட்டுமல்ல. பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

பல தம்பதிகள் மன அழுத்தத்தின் போது உடலுறவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் உடலுறவில் கலந்து கொண்டால் மன அழுத்தம் குறையும் என்கின்றனர் நிபுணர்கள். பாதுகாப்பான உடலுறவில் பங்கேற்பது ஒரு பெண்ணின் உடல், உணர்ச்சி மற்றும் மன நலனில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வழக்கமான உடலுறவின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் நன்மைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.

உடலுறவு என்பது உடல் இன்பம் மட்டுமல்ல. பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. உடலுறவு உடற்பயிற்சி போல செயல்பட்டு இதயத்தை பலப்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கிறது. இது பல நோய்களின் அச்சுறுத்தலையும் தவிர்க்கிறது.

Tap to resize

உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று நிபுணர்களின் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. வழக்கமான உடலுறவு உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை சாதகமாக பாதிக்கிறது.

வழக்கமான உடலுறவு உணர்ச்சி நெருக்கத்தை மேம்படுத்துகிறது. இது தம்பதி இடையே நல்ல உறவையும் மேம்படுத்துகிறது. 'காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாஸின், உடலுறவின் போது வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன் உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது துணை இடையே நம்பிக்கையையும் பாசத்தையும் அதிகரிக்கிறது.

வழக்கமான உடலுறவு உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுறவு இருதய உடற்பயிற்சியை வழங்குகிறது. உடலுறவின் போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. மேலும், இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு பெரிதும் அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வழக்கமான உடலுறவு பெண்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
 

வழக்கமான உடலுறவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இம்யூனோகுளோபுலின் ஏ (IgA) உற்பத்தியைத் தூண்டுகிறது. இது ஒரு ஆன்டிபாடி. நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் பெண்களுக்கு நோய்கள், தொற்று நோய்கள் வராது. வந்தாலும் சீக்கிரம் குறையும்.

பாலியல் செயல்பாடுகள் மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கிறது. உடலுறவின் போது உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இவை "நல்ல உணர்வை ஏற்படுத்தும்" ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகின்றன. பெண்கள் உடலுறவில் நிதானமாக இருப்பார்கள். வழக்கமான உடலுறவு காரணமாக அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உடலுறவின் போது எண்டோர்பின்கள் வெளியிடப்படுகின்றன, இது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் வலியையும் குறைக்கிறது. உடலுறவு இயற்கையான வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சில பெண்களுக்கு பாலுறவில் ஈடுபடும் போது தலைவலி, மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் பிற உடல் வலிகளில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
 

தொடர்ந்து உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு தூங்குவதில் சிரமம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். செக்ஸ் தூக்கமின்மை பிரச்சனையை குணப்படுத்துகிறது. ஆழ்ந்து உறங்கத்திற்கு உதவுகிறது. உடலுறவின் போது வெளியாகும் எண்டோர்பின்கள் மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. இது சிறந்த தூக்க முறைகளுக்கு வழிவகுக்கிறது. 

Sex

தொடர்ந்து உடலுறவு கொள்வதன் மூலம் இடுப்புத் தசைகள் வலுவடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிப்பதில் இந்த தசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தசைகளுக்கு உடலுறவு ஒரு பயிற்சியாக செயல்பட்டு அவற்றை பலப்படுத்துகிறது. பாலுறவில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்களுக்கு, குறிப்பாக வயதான காலத்தில் சிறந்த அறிவாற்றல் செயல்பாடு இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!