உடலுறவு வேண்டாம்னு விலகினால் இவ்வளவு பிரச்சனையா?

First Published Jan 5, 2023, 6:10 PM IST

நீண்டகாலமாக உடலுறவில் ஈடுபடாமல் விலகியே இருப்பதால் மனதையும் உடலையும் பாதிக்கும். 

மனம் ஒத்து போய் வைத்து கொள்ளும் உடலுறவில்தான் தம்பதியினருக்கு இடையில் அன்பு அதிகரிக்கிறது. பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் தொடர்ந்து ஏற்படும் சண்டைகளால் சிலர் உடலுறவு வைத்து கொள்வதில்லை. வீட்டில் தனி அறை இல்லாதது, துணையின் விருப்பத்தில் அக்கறை காட்டாமை, அதிக நேர வேலை உள்ளிட்ட பல காரணங்களால் பலர் திருமணமான சில காலங்களுக்கு பின்னர் உடலுறவு வைத்து கொள்வதில்லை. இதனால் மனம் மற்றும் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்ந்து உடலுறவு வைத்து கொள்ளாமல் இருப்பதால் மன நலனில் மாற்றம் வரும். சிலருக்கு பாலியல் விரக்தி ஏற்படலாம். இதனால் எப்போதும் எரிச்சலுடன் காணப்படுவார்கள். உடலுறவு வைத்து கொள்ளும்போது ஹேப்பி ஹார்மோன் எண்டோர்பின் அதிகம் சுரக்கும். இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஆனால் உடலுறவு வைத்து கொள்ளாத சமயங்களில் எண்டோர்பின்கள் சுரக்காமல் நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். 

உடலுறவு வைக்காமல் இருந்தால் பெண்ணுறுப்பு திசுக்கள் மென்மையாக மாறிவிடுகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகும்போது பெண்ணுறுப்பின் சுவர்கள் மெல்லியதாகத் தொடங்கும். தொடர்ந்து உடலுறவு கொள்ளாதது பெண்ணுறுப்பை மோசமாக்கும். உடலில் தேவையில்லாத அசௌகரியம் உண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். 

உடலுறவை தவிர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குளிர்காலத்தில் வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சியாக இருந்தால் உடலுறவு கொண்டு குளிரை இதமாக கடக்கலாம். அப்படியில்லாமல் இருவருக்குள்ளும் இடைவெளி வந்தால் குளிர்காலத்தில் சளி பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பருவகால நோய்கள் வராமல் தடுக்க, நோய்களை விரைவில் குறைக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். சில உணவுகளை எடுத்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இந்த சூழலை சமாளிக்கலாம். ஆனால் தொடர்ந்து உடலுறவு கொள்ளாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். 

பென்சில்வேனியாவில் உள்ள வில்க்ஸ் பேரே (Wilkes-Barre) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். அதில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு இம்யூனோகுளோபுலின் ஏ 30 விழுக்காடு உயர்வதாக கண்டறிந்துள்ளனர். இம்யூனோகுளோபுலின் ஏ என்ற புரதம் சளி, ஜலதோஷம் ஆகிய வைரஸ் தொடர்பான நோய்களை தடுக்கும். 

நீண்டகாலமாக உறவு கொள்ளாமல் இருந்தால் பெண்கள் தாமதமாகவே உச்சக்கட்டத்தை அடைவார்களாம். சில பெண்களுக்கு வலி உண்டாகும். நீண்ட நாள் உறவு கொள்ளாமல் இருந்தால் பெண்ணுறுப்பு வறண்டு போகக் கூடும். சில ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பல மாதங்கள் உடலுறவு இல்லாமல் இருப்பதும், அடிக்கடி உறவு கொள்வதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் மிதமான உடலுறவு ஆரோக்கியத்திற்கு அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

இதையும் படிங்க; கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அப்பாவாக முடியாதாம்.. ஆண்களே கவனம்!

click me!