ஆணுறுப்பு வளர்ச்சி இந்த வயதில் நின்றுவிடும்... அப்போ அதன் பிறகு செய்யும் முயற்சிகள் வேஸ்ட் தானா?

First Published | Mar 21, 2023, 1:35 PM IST

குழந்தைப் பருவத்தில் தொடங்கும் ஆணுறுப்பின் வளர்ச்சி எந்த வயதில் நிற்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இங்கு காணலாம்

சிறுவர்களின் ஒரு வயதில் இருந்து ஆணுறுப்பு வளர ஆரம்பிக்கிறது. ஆண்களின் பருவ வயதில் அந்த வளர்ச்சியை புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் பாலியல் முதிர்ச்சியடைய தொடங்குவார்கள். ஆண்களுடைய விதைப்பை ஆணுறுப்பை போல அல்லாமல், அவர்கள் பிறந்தபோது இருக்கும் அதே அளவில் தான் கிட்டத்தட்ட 8 - 9 வயது வரை இருக்குமாம். பிறகு அவர்களின் 11 முதல் 15 வயதை தாண்டிய பிறகு அவை வளரத் தொடங்கும். 

ஆண்களின் பருவமடைதல் 9 வயது முதல் 14 வயதுக்குள்ளாக நடக்கிறது. இது ஒரு சாதாரண வயது வரம்பு. ஆண் குழந்தைகளில் பருவமடைதல் பொதுவாக 12 வயதில் தொடங்குகிறது. இது சராசரி வயது தான் என்பதால், நபருக்கு நபர் மாறுபடலாம். பருவமடைதலின் முதல் அறிகுறியே அவர்களின் விரை வளர்ச்சிதான். பருவமடைதல் அவர்களுடைய விரைகளில் ஏற்படும் மாற்றங்களால் அடையாளம் காணப்படுகிறது. பருவமடைந்த ஆண் குழந்தைதின் விரை கருப்பு நிறத்தில் மாறிவிடும். அதன் அளவிலும் கூடுகிறது. அந்த சருமமும் மெலிதாகிவிடும். அதில் சிறிய புடைப்புகள் அல்லது முடி முளைக்கின்றன. 

Tap to resize

ஆணுறுப்பு வளர்ச்சியை எப்போது நிறுத்துகிறது?

முதலில் ஆணுறுப்பு நீளமாக வளரும். அதன் பின்னர் அதைச் சுற்றி வளரும். பருவகாலத்தில் ஆண்களின் உயரத்தைப் போலவே ஆணுறுப்பும் வேகமாக வளரும். ஆணுறுப்பு ஆண்களின் பருவமடையும் காலம் வரை வளரும். அதாவது இது சுமார் 5 ஆண்டுகள் நீடிக்கும். அவர்களின் இளமைப் பருவமான 18 வயது முதல் 21 வயதுக்குள் முடிவடைகிறது. 

ஆணுறுப்பின் அளவை அதிகரிக்க முடியுமா? 

அந்த உறுப்பின் அளவை அதிகரிக்க மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் பல ஆபத்துக்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆணுறுப்பின் அளவை பாதுகாப்பாக அதிகரிக்க போதுமான அறிவியல் சான்றுகளுடன் கூடிய மருந்து மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ், கிரீம்கள் அல்லது உடற்பயிற்சிகள் என்று எதுவும் இல்லை. இதை முயன்றால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். அவை ஆபத்தானவை. சரியான மருத்துவ பரிந்துரை இல்லாமல் எதையும் முயற்சி செய்யாதீர்கள். 

இதையும் படிங்க: திருமணம் ஆன முதல் 6 மாசத்துல இப்படி நடக்கலன்னா.. அப்புறம் அந்த கல்யாணமே வேஸ்ட்..!

அளவு முக்கியமா?

ஆணுறுப்பின் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல தவறான கருத்துக்கள் உள்ளன. உங்கள் துணை ஆணுறுப்பு அளவு குறித்து கவலைப்படுவதில்லை. பெரும்பாலான பெண்கள் அதைப் பார்ப்பதை கூட விரும்ப மாட்டார்கள். உடலுறவில் நீங்கள் எவ்வளவு திறம்பட செயல்படுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதற்கும் ஆணுறுப்பு அளவுக்கும் தொடர்பில்லை. உங்கள் ஆணுறுப்பின் அளவு டெஸ்டோஸ்டிரோன் அளவு, ஆண்மை அல்லது கருவுறுதல் ஆகியவற்றின் அடையாளம் அல்ல. உங்கள் உயரம் உங்கள் ஆணுறுப்பின் அளவைக் குறிக்கவில்லை. எனவே இதுபோன்ற விஷயங்களை கண்டுகொள்ளாதீர்கள். நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: orgasm: செக்ஸ் நிபுணரிடம் அந்த விஷயம் பத்தி கேட்கும் 3 கேள்வி - பதில்கள்.

Latest Videos

click me!