ஷாக்கிங் ஆய்வு.. மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்தால் கர்ப்பம் ஆவாங்களா?

First Published | Dec 28, 2022, 6:35 PM IST

பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியின் போது கருத்தரிப்பதற்கான சாத்தியம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மாதவிடாய் காலத்தில் குறைவு. ஆனால் முற்றிலுமாக அதற்கான வாய்ப்பே இல்லை என கூறிவிட முடியாது. மெடிக்கல் நியூஸ் டுடே ஆய்வின்படி, ஒரு நபர் எந்த நேரத்திலும் கர்ப்பமாகலாம் என தெரிய வந்துள்ளது.

மாதவிடாய் காலம் 

மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்களை கொண்டுள்ளது. இந்த வகை பெண்களுக்கு 14 நாட்களில் அண்ட விடுப்பு நடக்கும். மாதவிடாய் சுழற்சி 29-32 நாட்கள் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாதவிடாய் கால தொடக்கத்திலும் 13 முதல் 15 நாட்களில் அண்ட விடுப்பு நிகழுகிறது. அண்ட விடுப்பு என்றால் ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியாகும் நிகழ்வாகும். கருத்தரிக்க அண்டவிடுப்பின் போது, வெளியேறும் முட்டை ஃபலோபியன் குழாயின் வழியாக செல்கிறது. அங்கு விந்தணுக்கள் அதனுடன் இணைந்து கருத்தரிப்பு நிகழ்கிறது. அண்டவிடுப்பின் பின்னர் ஒரு நாள் மட்டுமே முட்டை உயிர்வாழ்கிறது. ஆகவே தான் அதே நாளில் விந்தணுவை செலுத்துவது அவசியமாகிறது. 

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் என்ன நடக்கும்? 

பல்வேறு ஆய்வுகளின்படி, ஒரு நபர் மாதவிடாய் சுழற்சியின் 7-13 நாட்களுக்குள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  எனவே ஒரு நபர் அவர்களின் மாதவிடாய் காலத்தில் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனாலும் ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் நீளம், மாதாந்திர கால வேறுபாடு, விந்தணு உடலுக்குள் இருக்கும் காலம் ஆகிய மூன்று காரணிகள் கருத்தரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. விந்தணு இல்லாத சமயங்களில் கருமுட்டை உடைந்து இரத்தப் போக்காக வெளியேறுகிறது. 

Tap to resize

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு கொள்ளும்போது கருத்தரிக்கும் வாய்ப்பில்லை என பல கருதுகின்றனர். அந்த சமயத்தில் கருமுட்டை வெளியேறும் சாத்தியம் குறைவு என்பதால் அப்போது உட்செல்லும் விந்தணுக்கள் கர்ப்பத்தை விளைவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மாதவிடாய் முடிந்தவுடன் விரைவில் கருமுட்டை வெளியேறினால், கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது. மாதவிடாய் முடிந்த பிறகு பெரும்பாலான பெண்களுக்கு அண்டவிடுப்பு நன்றாக இருந்தாலும், சுழற்சியின் நீளம் மற்றும் அண்டவிடுப்பின் நீளம் நபருக்கு நபர் மற்றும் சுழற்சிக்கு சுழற்சி பரவலாக மாறுபடும். ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் ஒரு கருமுட்டையே வெளியேறும்.

மாதவிடாய் காலத்தில் உறவு வைத்து கொள்வதால் புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவாக இருக்கும். இதனால் யோனி வலி குறைவாக இருக்கலாம். மேலும் கருப்பை  வாயில் உள்ள சளி போன்ற திரவம் வறண்டு காணப்படும். இதனால் யோனி பாதைக்கும் விந்தணுவுக்கும் போதிய இணக்கம் இருக்காது. கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. 

உங்கள் அண்டவிடுப்பு நிகழும் முன்பு உறவு வைத்து கொள்ளுதல் தான் கருவுறுவதற்கு சிறந்த நேரமாகும்.  அப்போதுதான் ஒரு முட்டை வெளியாகி கருவுறத் தயாராக இருக்கும். அண்டவிடுப்பின் பின்னர், முட்டை கருவுற ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது. அப்போது கருத்தரிக்க குறைந்த வாய்ப்புகள் இருந்தபோதிலும், நீங்கள் கர்ப்பத்தைத் தவிர்க்க நினைத்தால்  கருத்தடைகளைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். 

இதையும் படிங்க; வாழ்க்கையை மாற்றும் 5 முடிவுகள் புத்தாண்டில் இந்த தீர்மானத்தை எடுங்க!

Latest Videos

click me!