Peanut candy: புற்றுநோயைத் தடுக்கும் கடலை மிட்டாய்: யாரும் அறியாத அற்புத நன்மைகள்!

First Published | Feb 27, 2023, 6:19 PM IST

கடலை மிட்டாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கலர் கலராக பல நொறுக்குத் தீனிகளை வாங்கி கொடுக்கிறோம். ஆனால், இவையெல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்குப் பதிலாக எள்ளுருண்டை மற்றும் கடலை மிட்டாய் போன்ற நன்மை தரும் இனிப்பு வகைகளை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். பல வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற நன்மை தரும் இனிப்பு வகைகளைத் தான் குழந்தைகள் சாப்பிட்டனர். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. முதலில் இது பற்றிய விழிப்புணர்வை  பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வகையில், கடலை மிட்டாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

கடலை மிட்டாய் 

மிகவும் எளிதாக நம் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளில் கூட கிடைக்கும் இனிப்பு வகைகளில் கடலை மிட்டாயும் ஒன்று. ஆனால், ஒரு சிலருக்கு இதனை உண்பது பிடிக்காது என்பதால், தவிர்த்து விடுவார்கள். வேர்க்கடலை மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாயில், உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொடிய நோயான புற்றுநோயையே தடுக்கும் ஆற்றல் கொண்ட கடலை மிட்டாயை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாப்பிடலாம்.
 

Tap to resize

பாரம்பரியமான இனிப்பு வகைகள் அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்தவை. உணவு உண்ட பிறகு, ஒரு துண்டு கடலை மிட்டாய் சாப்பிட்டால் போதும். செரிமானம் சிறப்பாகும் என சொல்வதுண்டு. இந்த கடலை மிட்டாயை இனிப்பு என்று ஒதுக்காமல், சாப்பிட்டு வந்தால் அளவற்ற நன்மைகளைப் பெறலாம். பச்சை வேர்க்கடலையில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், அவை வறுக்கப்படும் போது கொல்லப்படுகிறது. அதே சமயம், இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இழப்பதை தவிர்க்க பச்சை வேர்க்கடலையை வாங்கி வீட்டிலேயே வறுக்கலாம்.

Jack Fruit Juice: தொடர்ச்சியாக 5 நாட்கள் பலாப்பழ ஜூஸ் குடித்தால் இந்த நோய் ஓடிப் போகும்!

கடலை மிட்டாயின் நன்மைகள் 

கடலை மிட்டாயை சாப்பிடுவதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.

மிகவும் கொடிய நோயான புற்றுநோய் வருவதனையும் தடுக்கும் வல்லமை பெற்றது.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவி செய்கிறது.

உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.

சிறந்த உடல் எடையை பராமரிக்கவும், உடல் பருமன் உண்டாவதை தடுக்கவும் உதவுகிறது.

எலும்புகளுக்கு பலத்தை பெற்றுக் கொடுக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது. மேலும், கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது.

உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் கடலை மிட்டாயை சாப்பிடுவதால் கிடைக்கிறது.
 

Latest Videos

click me!