ஆணுறை விஷயத்தில் ஆண்களின் மோசமான தவறுகள்.. ப்ளீஸ் இதை பண்ணாதீங்க..!

First Published | Mar 14, 2023, 6:09 PM IST

ஆணுறைகள் தேவையில்லாத கர்ப்பத்தைத் தடுக்கிறது. பால்வினை நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஆனால் ஆணுறை விஷயத்தில் பல ஆண்கள் சில தவறுகளை செய்கிறார்கள். இதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

ஆணுறைகள் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் (STIs) அபாயத்தைக் குறைக்கிறது. உண்மையில், பலருக்கு ஆணுறையை எவ்வாறு பயன்படுத்துவது என தெரியவில்லை என நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த தவறுகள் தேவையற்ற கர்ப்பத்தின் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் தொற்றும் பரவுகின்றன. ஆணுறை பயன்படுத்தும் போது ஆண்கள் செய்யும் சில பொதுவான தவறுகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

ஆணுறைகளை மறுபடியும் பயன்படுத்துதல் 

உங்களால் நம்பமுடியுமா? சில ஆண்கள் ஒருமுறை பயன்படுத்திய ஆணுறையை மறுபடியும் பயன்படுத்துகிறார்கள். இது நல்லதல்ல. ஆணுறைகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே பொருளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் அது சேதமடையலாம். மேலும் கிழிந்து போகலாம். 


ஆணுறை காலாவதி தேதி..  

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. ஆணுறைகளுக்கும் அதே போலவே காலாவதி தேதி உள்ளது என்பதை அறிவீர்களா? ஆணுறைகள் காலாவதியான பின் பயன்படுத்தினால் சேதமடையலாம். இந்த காலாவதி தேதியைப் பொருட்படுத்தாமல் ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆணுறைகளை வாங்கும் முன் அதன் காலாவதி தேதியை சரிபார்க்கவும். ஆணுறைகளை வாங்கி வீட்டில் வெறுமனே வைத்திருப்பதை தவிர்க்கவும். 

முன்கூட்டியே அணிவது..

செக்ஸ் வைக்கும்போது ஆணுறை எப்போது அணிய வேண்டும் என்பதை ஆண்கள் அறிந்திருக்க வேண்டும். உடலுறவுக்கு முன் ஆண்குறி நேராக இருக்கும் போது ஆணுறை அணிய வேண்டும். தாமதமாக அணியக்கூடாது. விறைப்புக்கு முன் இதை அணிந்தால் தான் சரியாக பொருந்தி வரும். அப்படி இல்லையெனில் இது பரவும் பாலியல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 

அளவு முக்கியம்..! 

ஆணுறைகள் பல அளவுகளில் வருகின்றன. மிகவும் இறுக்கமான அல்லது மிகவும் தளர்வான ஆணுறையை அணிவது பல பிரச்சனைகளை உண்டாக்கும். ரொம்ப இறுக்கமான ஆணுறையை அணிவதால் கிழியும் வாய்ப்புள்ளது. தளர்வான ஆணுறை எளிதில் நழுவிவிடும். இதனால் உடலுறவில் முழுகவனத்துடன் சரியாக பங்கேற்க முடியாது. 

இதையும் படிங்க: நீங்கள் அறிந்திராத சில செக்ஸ் உண்மைகள்.. இப்படியுமா நடக்குது? இந்த கில்லாடி விந்தணுக்களோட வேலைய பாருங்களேன்

ஆணுறையை கழற்ற அதிக நேரம் 

விந்து வெளியேறிவிட்டதா? உடனே ஆணுறையை அகற்ற வேண்டும். அதுவே உரிந்து விழாமல் இருக்க வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும். பொதுவாக விந்து வெளியேறியதும் ஆண்கள் விறைப்புத்தன்மையை இழக்க நேரிடும். இதனால் ஆணுறை நழுவி விழும். அப்போது விந்து ஒழுகும். அதைத் தவிர்க்க, விந்து வெளியேறிய உடனேயே ஆணுறையை அகற்ற வேண்டும். ஆணுறையின் அடிப்பகுதியை ஆண்குறியின் மீது வைத்து, விறைப்புத்தன்மையை இழக்கும் முன்பாக இரண்டையும் வெளியே இழுத்துவிடவும். 

ஆணுறையை இப்படித்தான் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: ச்சீ..!இந்த பிரச்சனை இருக்க ஆண்கள் கூட.. அவங்க மனைவி செக்ஸ் வச்சிக்காம விலகிடுவாங்க..!

Latest Videos

click me!