நம்பமுடிகிறதா? பாலியல் ஹார்மோனை ஆரோக்கியமாக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி..!!

First Published | Mar 3, 2023, 2:30 PM IST

கோகோ கோலா மற்றும் பெப்சி இரண்டும் ஆண்களின் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோனின் உற்பத்தி அதிகரிப்பதால், அது இயற்கையாகவே ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொதுவாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றக்கூடியவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்கின்றனர். 

குறிப்பாக செயற்கை இனிப்பு பானங்கள். இதேபோல், பலர் கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கின்றனர். அதில் கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற பானங்களை பலரும் துளி கூட அருந்துவது கிடையாது. ஆனால் ஒரு புதிய ஆய்வின் படி, கோகோ கோலா மற்றும் பெப்சி இரண்டும் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

சீனாவின் 'வடமேற்கு மின்சு பல்கலைக்கழகம்' ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் பின்னணியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான ஆக்டா எண்டோகிரைனாலஜிகா என்கிற சுகாதார வெளியீட்டில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி, கோகோ கோலா மற்றும் பெப்சி இரண்டும் ஆண்களின் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோனின் உற்பத்தி அதிகரிப்பதால், அது இயற்கையாகவே ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 


இது தவிர, இந்த பானங்கள் ஆணின் பாலின உறுப்பான விதைப்பையின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பாலின ஆரோக்கியம் மேம்படும் என்றும் ஆய்வு விளக்குகிறது. ஆனால் குளிர்பானங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கடந்த கால ஆய்வுகள் பல, எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்துள்ளன. அதனால் இதை உறுதியுடன் கூறுவதற்கு பல்வேறு மருத்துவ நூல்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

Brea up Sex : பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவது சரியான முடிவு கிடையாது- ஏன் தெரியுமா..?

முந்தைய ஆய்வுகள் பல வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ஆய்வுகள் அனைத்தும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் விந்தணு ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. அதனால் ஆண்களின் பாலியல் ஆரோக்கிய விஷயத்தில், இதுதான் உண்மை என்று கூற முடியவில்லை. 

சீன ஆராய்ச்சியாளர்கள் ஆண் எலிகளை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். பல நாட்கள் அவற்றை கண்காணித்து, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆய்வின் நம்பகத்தன்மை குறித்து குறிப்பிடத்தக்க சர்ச்சைகள், வாதங்கள் மற்றும் விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. 
 

Latest Videos

click me!