உடலுறவை என்ஜாய் செய்வது போல் கணவரிடம் நடிக்கும் பெண்கள்.. ஏன் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க..

First Published | Nov 23, 2023, 5:19 PM IST

தங்களுக்கு பிடிக்காத போதும் உடலுறவை ரசிப்பது போல் சில பெண்கள் தங்கள் கணவரிடம் நடிப்பார்களாம். அது ஏன் என்பது குறித்து சில பெண்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆரோக்கியமான மகிழ்ச்சியான திருமண உறவில் உடலுறவுக்கு முக்கிய பங்குள்ளது. திருப்தியான உடலுறவு உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியான ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் அல்லது விருப்பம் இருக்காது. எனவே தங்களுக்கு பிடிக்காத போதும் உடலுறவை ரசிப்பது போல் சில பெண்கள் தங்கள் கணவரிடம் நடிப்பார்களாம். அது ஏன் என்பது குறித்து சில பெண்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

திருமணமான பெண் ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ நான் பழமைவாத சூழலில் வளர்ந்த பெண், எனவே என் கணவருக்கு சரியான மனைவியாக இருக்க வேண்டும் என்பது எனக்குள் ஆழமாக பதிந்தது. நான் என கணவருக்காக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன்..

Tap to resize

ஆனால் என் நெருக்கமான வாழ்க்கையின் சில அம்சங்கள் எனக்கு சவாலாக உள்ளன. என்னை பற்றி தவறாக புரிந்துகொள்வாரோ என்பதற்கு பயந்து, அவரைப் பிரியப்படுத்த நினைக்கும் செயல்களில் ஈடுபடுவேன். ஒவ்வொரு நாளும் சமூக நெறிமுறைகளுக்கும் எனது உண்மையான உணர்வுகளுக்கும் இடையே உள்ள உள் மோதலை உணர்கிறேன், என் தியாகம் நீண்ட காலத்திற்கு நிலையானதா இல்லையா என்று கேள்வி எழுப்புகிறது.” என்று தெரிவித்தார்.

Hygiene in Sex

மற்றொரு திருமணமான பெண் பேசிய போது “ நான் ஒரு பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்ததால் என் கணவருக்கு பிடித்த மனைவியாக இருக்க வேண்டும் என்று நடிக்கிறேன். நான் 2 தங்கைகளை வளர்க்க வேண்டும், அந்த அழுத்தம் காரணமாக என் கணவரை மகிழ்விக்க வேண்டும் என்று உணர்கிறேன். இதற்காக உடலுறவை எனக்கு பிடித்தது போல் நடிக்கிறேன்.. ஆனால் எனக்கு அது எப்போதும் பிடிக்காது. இதை என் கணவர் உணரும் நாளில், அவர் என்னை ஏமாற்றலாம் அல்லது விவாகரத்து செய்யலாம் என்று எனக்குத் தெரியும். எனவே நான் பொய்யாகவே வாழ்ந்து வருகிறேன்” என்று கூறினார்.

இதே போல் இன்னொரு திருமணமான பெண் பேசிய போது “ இயற்கையாக நான் அடுத்தவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பவர்ள். எனது இந்த நிலையை நான் ஏற்றுக்கொள்ளாத வரை என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்ற உண்மையை நான் ஏற்றுக்கொண்டேன். மேலும் எனக்கு நிலையான திருமண வீடு தேவை.

நான் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன், அவர் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். உடலுறவில் இருக்கும் நெருக்கமான தருணங்களில் நான் அதை விரும்புவது போல் நடிக்கிறேன். என் மகிழ்ச்சியை விட என் கணவரின் மகிழ்ச்சிக்கு நான் முன்னுரிமை கொடுக்கிறேன், எனக்குள் பல முரண்பாடுகள் உள்ளன.

Sleeping after having sex

மற்றொரு திருமணமான பெண் பேசிய போது “ என் குழந்தைகள் என் உயிர். அவர்களிடமிருந்து பிரிவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது, நான் என் கணவரை விட்டுவிட்டால், எல்லாம் முடிந்துவிடும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டேன், ஆனால் உடலுறவின் போது நான் அவருடன் உடல் ரீதியாக மட்டுமே இருக்கிறேன். என் மனதளவில் இல்லை.

நான் எனக்குள்ளே கத்திக்கொண்டிருக்கும்போது, உடலுறவை ரசிப்பது போல நடிக்கிறேன். அந்த கோபத்தை மாற்ற நடனம் மற்றும் யோகாவில் கவனம் செலுத்தி வருகிறேன்.. பெண்கள் பல தியாகங்களை செய்கிறார்கள் ஆனால் இந்த நிலையில் இருப்பது என் விருப்பம் தான்..” என்று தெரிவித்தார்.

Latest Videos

click me!