ஆண்களே ! நீங்கள் இந்த மாதிரி நடந்துக்கிட்டா உங்கள் மனைவிக்கு பிடிக்காதாம்!

First Published | Apr 22, 2023, 6:55 AM IST

ஆண்களில் சிலர் அவர்களது படுக்கையில் மிக மோசமாக இருப்பதற்கான காரணங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆண்களில் பலருக்கும் தாம்பத்ய வாழ்க்கை மிகவும் சவாலான ஒன்றாக தான் இருக்கிறது. ஒரு ஆண் படுக்கையில் தாம்பத்ய செயல் திறனை மேம்படுத்த தன்னால் முடிந்த வரை முயற்சி செய்தாலும்,சில நேரங்களில் தோல்வியில் தான் முடிகிறது. அதற்கு அவர்களின் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் கூட காரணமாக அமையலாம்.

பல ஆண்கள் தங்களின் பாலியல் செயல் திறன் பற்றி கவலையாக எண்ணுகிறார்கள். உடலுறவில் எவ்வாறு செயல்படுவது? மனைவியை எப்படி மகிழ்விப்பது? போன்ற பல விஷயங்களை பற்றி புரிந்து கொள்ளாமல் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். உடலுறவை பற்றி பல விஷயங்களை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன.

அந்த வகையில், ஆண்களின் சில பழக்க வழக்கங்களால் உடலுறவில் செயல்படும் தன்மை அவர்தம் மனைவிக்கு அதிருப்தி ஏற்படும் என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள்.

அனுபவம் இல்லாமை:

ஆண்களில் பலருக்கும் தாம்பத்தியத்திற்கு புதியவர்களாக இருப்பதால் அவர்களுக்கு போதுமான தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு குறைந்த அளவிலான அனுபவம் பெற்றிருப்பார்கள்.

ஒரு ஆண் தன்னுடைய மனைவியை செக்ஸில் திருப்தி செய்து, மகிழ்விக்க தேவையான திறமைகள் அவர்களிடம் இல்லை என்று எண்ணிக் கொள்ளலாம்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் ஒரு சில ஆண்கள் புதிய மற்றும் வித்தியாசமான விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். உடலுறவில் எப்படி நீடித்து இருப்பது, சிறப்பாக செயல்படுவது,உற்சாகப்படுத்துவது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்ளமால், தன்னை பற்றி தாழ்வாக எண்ணிக் கொண்டு, படுக்கை அறையில் உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்.

செயல்திறன் கவலை:

செயல்திறன் கவலை இருக்கின்ற ஆண்கள் தங்களின் உடலுறவின் போது விறைப்புத் தன்மையினால் போராடுவார்கள். இதனால் அவர்களின் விந்து முன்கூட்டியே வெளியேறலாம்.

இது ஆண்களை மிகவும் விரக்தியடைய செய்கிறது. தவிர அதிருப்தியாகவும் உணர செய்கிறது. இது போன்ற காரணத்தினால் ஆண்கள் தங்கள் படுக்கையில் நம்பிக்கை இழந்து கவலையாக உணறவர்கள்.

உங்க மனைவி இப்படி சிக்னல் தருவது "அதுக்கு" தானாம் ! அப்போ டைம் வேஸ்ட் பண்ணலாமா!

சுயநலம் :

ஆண்களில் சிலர் தங்கள் மனைவியின் சந்தோஷத்தை விட அவர்களின் சந்தோஷத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


இது அவர்களின் மனைவிக்கு உடலுறவின் போது ஒதுக்கப்பட்டதாக உணர்வார்கள். இத்தகைய காரணத்தினால் அவர் தம் மனைவி வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கும் . ஆணின் தேவைக்கே முதலிடம் அளிக்கப்படும் பட்சத்தில அவர்தம் மனைவி உடலுறவில் ஈடுபாடில்லாமல் இருக்கும் இருப்பார்கள்.இதனால் ஆண்கள் திருப்தியற்ற உடலுறவை தான் பெறுவார்கள்.

முன்விளையாட்டு :

உடலுறவிற்கு முன்பாக சில விளையாட்டில் ஈடுபடுவதை பெண்கள் பலரும் விரும்புவார்கள். இது அவசியமானதும் கூட என்றே கூற வேண்டும். ஏன்னெனில் பெண்கள் இதனை மிகவும் எதிர்பார்ப்பார்கள். முத்தமிடுவதும், கைகளால் சீண்டுவதும், கட்டியனைப்பது போன்ற சில சிற்றின்பத்தை முதலில் எதிர்பார்ப்பார்கள். இதுவே உடலுறவில் தீவிரமாகவும், உற்சாகமாகவும், திறம்பட செயல்படவும், உச்சக்கட்டத்தை அனுபவிக்கவும் ஃபோர்பிளே அவசியமானது.

முன்விளையாட்டு செய்யமால் செய்யப்படும் உறவுகளை பெரும்பாலான பெண்கள் ரசிப்பதில்லை மேலும் விரும்புவதும் இல்லை . ஃபோர்பிளே செய்யாமல் உடலுறவில் ஈடுபடும் போது பெண் முழுமையான தூண்டப்படாதால் திருப்தியற்ற உடலுறவை தன பெறுவார்கள்.

மோசமான உடல் ஆரோக்கியம்:

ஆண்கள் ஒரு சிலர் தங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததால் அவர்களின் உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வை அல்லது அந்த உறுப்பில் இருந்து வரும் துர்நாற்றத்தை படுக்கை அறைக்கு செல்லும் முன்பு சரி செய்து கொள்ள வேனுடம். சுகாதாரமற்ற உடலுறவை எந்த ஒரு பெண்ணும் ரசிக்க மாட்டாள்,அதே நேரத்தில் அவள் முழு ஈடுபாடுடன் உடலுறவில் இருக்க மாட்டாள். ஆக தாம்பத்தியத்தில் சிறப்பாக செய்லபடுவதற்கு உடலை முறையாக பராமரித்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Latest Videos

click me!