ரேப்பிஸ்ட் மேல் கட்டுக்கடங்காத காதல்.. அதுவும் ஜெயிலுக்கே போய் கல்யாணம் செய்த பெண்.. கூசாமல் சொல்லும் காரணம்

First Published | Feb 28, 2023, 3:14 PM IST

பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நபரை, காதலித்து திருமணம் செய்த பெண் சொன்ன காரணம் என்ன தெரியுமா? உள்ளே காணலாம். 

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கு மனசாட்சியே இல்லை போல் இருக்கிறது. பாலியல் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் நபர் மீது இளம்பெண் காதல் கொண்டு அவரையே மணந்து கொண்ட சம்பவம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆனால் தனக்கு காதல் வந்த கதையை 'காதலுக்கு எந்த எல்லையும் இல்லை' என பகிர்ந்துள்ளார் ஜெம்மா மோர்கன். தன் காதலை அவர் கொண்டாடுகிறார். அதில் அவமானப்பட ஏதும் இல்லை என்கிறார். 

ஜெம்மா மோர்கன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 29ஆம் தேதி தான் லியோனல் வாஸ்க்குவேஸை சிறையில் சந்தித்துள்ளார். ஏற்கனவே மெசேஜில் பேசி நெருக்கமாகி இருந்தாலும், முதல் முதலாக பார்த்தபோது மனதை பறிகொடுத்துவிட்டாராம். அதற்கடுத்து இருவரும் ஆன்லைனில் மெசேஜ் செய்து பேசியுள்ளனர். ஒவ்வொருமுறை வாஸ்குவேஸிடமிருந்து மெசேஜ் வரும்போதும் ஜெம்மாவுக்கு மனதுக்குள் பட்டர்ப்ளை பறக்குமாம். கட்டற்ற தன் காதலை அவரால் அப்போது உணரமுடியுமாம். 


ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜெம்மா, தன் ஜெயில் பறவையாக வாழும் கணவனை பற்றி பேசும்போது பரவச நிலை அடைந்துவிடுவாரம். எப்படிங்க ஒரு ரேப்பிஸ்ட் மேல காதல் வரும் என ஜெம்மாவிடம் சிலர் கேட்கவே செய்துவிட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில்.. காதலுக்கு யார் என்றெல்லாம் தெரியாது, எனக்கு அவருடைய குற்ற பின்னணி குறித்து கவலையில்லை..அவரை நான் காதலிக்கிறேன் என வெடுக்கென பதில் சொல்லிவிட்டாராம். ஆனால் கேள்விகள் அத்தோடு நிற்கவில்லை. அவர்கள் எப்படி சந்தித்தார்கள்? 

2021ஆம் ஆண்டு அமெரிக்க பெண்ணோடு ஜெம்மா ஆன்லைனில் ஸ்பானிஷ் வகுப்பு எடுக்கும்போது தான் வாஸ்க்குவேஸ் பற்றி அறிந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. பேச ஆரம்பித்த பிறகு இருவருக்கும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வு இருந்தது, இருவரையும் உணர்ச்சிரீதியாக கட்டிப்போட்டது. 90களின் இசையை கேட்டபடியே காதல் வளர்த்துள்ளனர். ஒரு நாள் ஜெம்மா, வாஸ்க்குவிடம் அவர் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என கேட்டிருக்கிறார். 

தன்னுடைய குற்றத்தை குறித்து ஜெம்மாவிடம் மனம் திறந்த வாஸ்குவேஸ், கொஞ்சம் தயங்கியுள்ளார். ஆனால் எல்லாவற்றையும் கேட்ட பிறகு ஜெயிலில் இருக்கும் வாஸ்குவேஸை, ஜெம்மா கூடுதலாக காதலிக்கத் தொடங்கி விட்டாராம். தன்னுடைய சின்ன வயதில் தவறு செய்துவிட்டு 20 ஆண்டுகளாக வாஸ்குவேஸ் சிறையில் இருக்கிறார். இப்போது அவர் ரொம்பவே மாறிவிட்டார். அவருக்கு வாழ இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிறார் ஜெம்மா. 

ஸ்காட்லாந்தில் வசிக்கும் ஜெம்மா, கடந்தாண்டு தன் சிறை காதலனை சந்திக்க அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சிறைக்குள் தான் முதல் சந்திப்பு, முதல் முத்தம். அந்த முத்தத்தின் பரவசம் இன்னும் இருப்பதாக வாஸ்குவேஸ் ஒருபேட்டியில் சொல்லியிருக்கிறார். தன் இயல்போடு தன்னை ஏற்று கொள்ளும் ஒருவருக்காக சிறையில் 20 ஆண்டுகள் காத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். சிறையில் சந்தித்த மூன்று மாதங்களுக்கு பிறகு தொலைபேசியில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் வாஸ்குவேஸ். அதற்கு ஜெம்மா ஒப்பு கொள்ளவே, சில மாதங்களுக்கு முன் இரண்டு காவலர்களுக்கு முன்னிலையில் அவர்கள் திருமணம் முடிந்தது. 

இதையும் படிங்க; 91 வயதில் காதலில் விழுந்த தொழிலதிபர்.. ரூ.66 ஆயிரம் கோடி சொத்து இருந்தா பொம்பள சுகம் கேட்கதான செய்யும்!!

திருமணம் முடிந்ததும் கட்டியணைத்து முத்த மழை பொழிந்த தம்பதிகளை கொஞ்ச நேரத்தில் காவலர்கள் விலக்கிவிட்டனர். ஜெம்மா வீடு திரும்ப, அவர் கணவரோ சிறை திரும்பிவிட்டார். இப்போது இருவரின் காதலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. வாஸ்குவேஸ் 4 ஆண்டுகளுக்குள் அவரின் நன்நடத்தை காரணமாக விடுதலையாகிவிடுவாராம். அப்படி அவர் வெளியானால், இருவரும் ஒரே வீட்டில் சுதந்திரமாக இருக்க முடியும் என ஜெம்மா மகிழ்ச்சி பொங்க ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சியால் யோகம் பெறும் 4 ராசிகள்.. உலகமே எதிர்த்தாலும் இவங்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை தான்

Latest Videos

click me!