உங்க செக்ஸ் லைப்ல நீங்க இதை எல்லாம் கரக்ட்டா ஃபாலோ பண்றீங்களா?அப்போ உங்க மனைவி லக்கி தான் !

First Published | Apr 8, 2023, 4:10 PM IST

பெண்கள் உடலுறவிற்கு முன் இதையெல்லாம் தங்கள் கணவர் செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

தாம்பத்திய வாழ்வில் உடனடியாக அல்லது நேரடியாக உறவு கொள்வதை பெண்கள் பலரும்  விரும்ப மாட்டார்கள். செக்ஸிற்கு முன்பாக பெண்கள் சில விஷயங்களை தங்கள் கணவர் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி செய்யும் பொழுது மகிழ்ச்சியான ஒரு சூழல் உருவாகும் தவிர அந்த ஒரு உடலுறுவு இனிமையான,மகிழ்வான தருணமாக மாறும். அதோடு பின்னாளில் அது செக்ஸின் பல சுவாரஸ்ய கதைகளை கூறும்.  


சந்தோஷமான, திருப்திகரமான உடலுறவுக்கு முதலில் போர்ஃபிளேவை அதிகமாக பெண்களின் விருப்பமாக உள்ளது. அனேகமாக அனைத்து வயது பெண்களும் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன்பு தங்கள் கணவன் முன்விளையாட்டு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

செக்ஸில் பெண்கள் உற்சாகமடையவும், மற்றும் உச்சக்கட்டத்தை அடையவும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. ஆகவே உங்கள் மனைவியை இன்புற செய்ய முன்விளையாட்டு மிகச் சிறந்த தூண்டுதல் மற்றும் உந்துதலாக அமையும் . அதே நேரத்தில் போர்ஃபிளே செய்வதற்கு முன்னும் சில விஷயங்களை அவர்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கிறார்கள். அவை என்னென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.

உணர்ச்சிகரமான ஒரு பிணைப்பு :

பெண்களில் பலரும் உடல் நெருக்கத்தை விட உணர்வு பூர்வமான, உணர்ச்சிகரமான ஒரு நெருக்கம் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். ஆகவே போர்ஃபிளேவுக்கு முன் உங்கள் மனைவியுடன் உணர்வு பூர்வமாக இணைவதற்கு சிறிய அளவிலான நேரம் ஒதுக்குவதால் உங்களது உடலுறவு மிகவும் சுவாரஸ்யமாக மாறும் .

அதற்கு நீங்கள் ரொமாண்டிக்கான சில பாடல்கள் அதிலும் அவர்களுக்கு பிடித்த ரொமான்டிக் சாங்ஸ் கேட்காலம் அல்லது ரொமான்டிக் உரையாடல் பேசுவதன் மூலம் உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உணர்ச்சி ரீதியான ஒரு பிணைப்பை உண்டாக்கும்.

ஸ்பரிசத்துடன் கட்டியணைத்தல் :

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்க கட்டிப்பிடிப்பது சக்தி வாய்ந்த ஒரு உணர்வாக அமையும். ஃபோர்பிளேயில் பெண்கள் அவர்களது கணவர் கட்டியணைப்பதும் , கை கோர்ப்பதுமான சில தொடுதல்களை ரசிப்பார்கள்.

உங்கள் மனைவியின் தலைமுடியை கோதுவது, முதுகு புறத்தில் மெதுவாகத் தடவி விடுவது போன்றவற்றை அவர்கள் விரும்பி ரசிப்பார்கள். இப்படி செய்கையில் உங்களது மனைவி செக்ஸில் மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடன் விளையாடுவார். அதோடு செக்ஸில் திருப்தியும் அடைவார்கள்.

லவ் சைன்ஸ் :

நீங்கள் செய்யும் காதல் இச்சைகள் போர்ஃபிளேவிற்கான மனநிலையை அமைக்கும். உங்கள் பெட் ரூமை, நறுமண ரூம் ஸ்பிரே கொண்டு வாசனையை உண்டாக்குங்கள். அவர்களுக்கு பிடித்த பாடல்கள் ஒலிக்க செய்து மனைவியின் மன நிலையை ரொமாண்டிக் மூடிற்கு ஏற்றமாதிரியான பாடல்களை தேர்ந்து எடுத்து கேட்கவேண்டும்.

 


உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள்:

உங்க பாட்னரிடம் உடல் மொழியை மெருகேற்றி அவளது தேவைகளை பூர்த்தி செய்வதில் 1 திருப்திகரமாக அமையும். சாஃப்டான மெல்லிய முத்தங்கள், முணுகல்கள் , ஸ்பரிசத்துடன் தொடுதல் , மசாஜ்கள். கட்டியணைத்தல் போன்றவற்றின் மூலம் அவளது மேனியை ஆராய்வதற்கு நேரம் செலவிடுங்கள் . இப்படி செய்வதன் மூலம், உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை தூண்டுவதாக அமையும். அவள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்பாள்.

அன்பாக பேசுதல்:

இனிமையாகப் பேசி போர்ஃபிளேவிற்கு முன், அவரது விருப்பங்கள், எல்லைகள் ஆகியவற்றை பற்றி பேசி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி உங்களிடம் எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாள் மற்றும் எதை செய்ய க் கூடாது என்று எண்ணுகிறாள் போன்றவற்றை அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

செக்ஸில் மனைவியின் விருப்பு வெறுப்புகளை முதலில் தெரிந்து கொள்வதால் அது உங்கள் இருவருக்கும் திருப்தியான மற்றும் இனிமையான ஒரு உடலுறவை பெறச் செய்யும்.

90'ஸ் கிட்ஸ்: 90ஸ் கிட்ஸ்களின் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போவதற்கான காரணங்கள் இவைகள் தான்!

Latest Videos

click me!