"காதலுக்கு நம் கற்பனைதான் காரணம், மற்றவர் அல்ல" என மார்செல் ப்ரூஸ்ட் கூறியுள்ளார். தங்களுடைய சொந்த கற்பனைகளை துணை பூர்த்தி செய்யாமல் போனாலோ, சொந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் சிலர் அந்த உறவை விட்டு விலக நினைக்கிறார்கள். இப்படிதான் கள்ள உறவு எனும் திருமணத்தை மீறிய உறவு தொடங்குகிறது.
ஆண்களும், பெண்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெண்ணின் மூளையைப் பொறுத்தவரை, பாலினமும் காதலும் அவளுக்கு ஒன்றாக தெரிகிறது. ஆண்களை பொறுத்தவரை காதல் தனி, காமம் தனி. பெரும்பாலும் அதை குழப்புவதில்லை. பெண்களுக்கு திருமணத்தை மீறி உறவுகள் உணர்வுகளுடன் பின்னி கிடக்கின்றன. அதை அவர்கள் தீவிரமாக அணுகுவார்கள். உணர்வுகளும், பாலியல் தேவைகளும் ஒருசேர பொருந்தாமல் போனால் அந்த உறவை விட்டு விலக நினைக்கிறார்கள். அதனால் தான் திருமணத்தை மீறிய உறவுகளில் ஆண்கள் குழப்பம் அடைவதில்லை.
ஒவ்வொரு உறவுக்கும் தேனிலவு காலம் என குறிப்பிட்ட காலம் இருக்கும். அப்போது உயிர்ப்புடனும், நேசிக்கப்படுவதாகவும் உணர்வு வரும். இந்த குறுகிய காலம் முடிந்ததும், சலிப்பு வரும். அதே தான் திருமணத்தை மீறிய உறவுகளுக்கும் நடக்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். திருமணத்திற்கு அப்பாற்பட்ட சில உறவுகள் நீண்ட காலம் இருக்காது. சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை தான் நீடிக்குமாம்.
இந்த உறவுகளின் நோக்கம் வாழ்க்கையின் வசந்தத்தையோ, ஏக்கத்தை பூர்த்தி செய்வதோ கிடையாது. திருமண உறவில் திருப்தியில்லாமல், வெளிநபருடன் இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அப்படி ஆசை வந்த பிறகு நீங்கள் அந்த நபருடன் ஏதாவது ஒரு வழியில் நெருங்காவிட்டால் உங்கள் மனம் அமைதி கொள்ளாமல் அலைபாயும். அதன் பிறகு நீங்கள் செய்யும் விஷயங்கள் தான் வாழ்க்கையை புரட்டி போடும்.