உடலுறவுக்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சுக்க இதை படிங்க..

First Published | Sep 8, 2023, 3:49 PM IST

உடலுறவுக்கு முன் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உடலுறவு என்பது திருமணமான தம்பதிகளுக்குள் நடக்கும் பொதுவான நிகழ்வு. உடலுறவு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும் உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக  கனமான, எண்ணெய் அதிகம் உள்ள அல்லது காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இவை அசௌகரியம் அல்லது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே உடலுறவுக்கு முன் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து பார்க்கலாம்.

Pills before sex

நீங்கள் பால் பொருட்கள் அலர்ஜி கொண்டவராக இருந்தால் கட்டாயம் சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸ் எனபப்டும் பாலாடைக்கட்டியில் லாக்டோஸ் அதிகமாக உள்ளது, மேலும் உங்கள் வயிற்றில் கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே, உடலுறவில் ஈடுபட திட்டமிட்டால் அதற்கு அந்த சீஸி பீஸ்ஸாக்கள், பாஸ்தாக்கள் அல்லது பர்கர்களைத் தவிர்க்கவும்

Tap to resize

உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க விரும்பினால், உடலுறவுக்கு முன் காரணமான உணவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது. காரமான உணவு ஆசிட் ரிஃப்ளக்ஸ், அஜீரணம் அல்லது பல சிக்கல்களை ஏற்படுத்தும்,.

பீன்ஸ் உடலில் ஜீரணிக்க மிகவும் கடினமான சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது, மேலும் அது உங்கள் பெருங்குடலை அடையும் நேரத்தில், பாக்டீரியா இந்த மூலக்கூறுகளை நிறைய வாயுவாக மாற்றுகிறது. இது நிச்சயம் அசௌகரித்தை ஏற்படுத்தும். எனவே உடலுறவுக்கு முன்பு பீன்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

நொறுக்கு தீனி அல்லது துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், அது உங்களை மிகவும் மந்தமானதாக மாற்றும்! உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால் பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும்.

சர்க்கரை நிறைந்த கேக்குகள் மற்றும் குக்கீகள் அனைத்தும் உங்கள் செக்ஸ் அனுபவத்தை அழித்துவிடும். ஏனென்றால், இனிப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது, எனவே உடலுறவுக்கு முன்பு இதை தடுப்பது நல்லது. 

உடலுறவுக்கு முன்பு கட்டாயம் மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் மெலடோனின் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது, இது தூக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் உங்கள் பாலின ஆசையை மாற்றுகிறது. இது உங்களை மந்தமாக மாற்றும். நீங்கள் உடலுறவுக்கு தயாராக இல்லை என்று உணர வைக்கும்

உடலுறவுக்கு முன் உப்பு நிறைந்த உணவைத் தவிர்க்கவும்! ஏனென்றால், உப்பு நிறைந்த உணவுகள் எந்த நேரத்திலும் வீக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, உங்கள் இரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைவதையும் தடுக்கலாம். 

Latest Videos

click me!