Sex Facts : வினோதமான 5 பாலியல் சார்ந்த உண்மைகள்- தெரிந்துகொள்ளுங்கள்..!!

First Published | Mar 15, 2023, 12:05 PM IST

உடலுறவு என்பது ஒவ்வொரு உயிரின் உரிமை சார்ந்த செயல்பாடாகும். இந்த உலகத்தில் தொடர்ந்து தனது சந்ததிகள் வாழ வேண்டும் என்று மனிதன் எண்ணும் போது, அவனுக்கு இருக்கும் ஒரேயொரு வழி பாலுறவு தான். வெறும் உயிர்களின் வளர்ச்சி மட்டுமில்லாமல், உடல்நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு பாலுறவு பயன் தருகிறது. நம்முடைய ஒட்டுமொத்த உடல் சார்ந்த இயக்கமும் பாலியல் வாழ்க்கை சரியாக இருக்கும் வேண்டும் என்கிற சிந்தனையை கொள்வது தான். எனினும் ஆண்டாண்டு காலமாக மக்கள் பாலியல் சார்ந்த வினோதமான உண்மைகளை நம்பிக்கொண்டே வருகின்றனர். அந்த உண்மைகள் குறித்தும், அதனுடைய நம்பிக்கை தன்மையை குறித்தும் விவரமாக பார்க்கலாம்.
 

முதிய தம்பதிகளால் முடியாது

அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. இளைஞர்களைப் போன்று வயதான தம்பதிகளும் சிறப்பாக வகையில் உடலுறவை மேற்கொள்ளலாம். வயதாக வயதாக பாலியல் சார்ந்த எண்ணங்கள், விருப்பங்கள் மறந்துபோகும் என்பதெல்லாம் பெரும் கட்டுகதையாகும். ஒருசில தம்பதிகளுடைய உடல் வலிமையை பொறுத்து, வயதானவர்களாக இருந்தாலும் அவர்களாக் இளைய தலைமுறையினரிடை விடவும் சிறப்பாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு மெனோபாஸ் பிரச்னை எதுவும் தடையாக இருக்காது.
 

பாலியல் சார்ந்த கனவுகள்

அமெரிக்காவைச் சேர்ந்த அகெடமி ஒன்று தூக்கம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அதன்படி 10-ல் ஒருவருக்கு (ஆண், பெண் உட்பட) தினசரி பாலியல் சார்ந்த கனவுகள் வருவது தெரியவந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பாலியல் கனவு வந்தால், தாங்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும் என்று அஞ்சுகின்றனர். அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. கனவுகள் காண்பது இயல்பானது என்பதை போல, கனவுகளில் பாலியல் சார்ந்த சூழல் வருவதும் இயல்பானது தான். அதை வெறும் கனவாக மட்டும் பாருங்கள். அதுவே போதுமானது.
 


தலைவலி காமத்தை தூண்டும்

பலருக்கும் தலைவலி ஏற்படும் போது, காமம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்குவதாக வருத்தப்படுகின்றனர். குறிப்பாக பதின்பருவ வயதில் இருப்பவர்களிடையே, இந்த பிரச்னை அதிகம் காண முடிகிறது. அதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கவலை அடைகின்றனர். தலைவலி ஏற்படும் போது, உங்களுடைய மண்டையில் ரசாயான மாற்றம் ஏற்படும். அது ஒருவேளை பாலியல் சார்ந்த சிந்தனைகளை தூண்டலாம். அதுவும் நீங்கள் பதின் பருவத்தில் இருந்தால், எளிதாக இந்த தாக்கம் உங்களுக்குள் வரும். ஆனால் எதையும் நினைத்து கவலை அடைய வேண்டாம்.

காலுறை ஆர்காசத்தை வழங்கும்

இந்த கோட்பாட்டை சில ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. ஆனால் இதை எந்தவிதமான மருத்துவக் கழகமும் அங்கீகரிக்காமல் தான் உள்ளன. பொதுவாக பாலுறவு சிறப்பாக அமையும் பட்சத்தில், ஆர்காசம் தன்னாலே ஏற்படும். நல்ல ஆர்காசம் கிடைக்க வேண்டி மருந்துகள் சாப்பிடுவது, கண்ட பொருட்களை சுய இன்பத்துக்கு பயன்படுத்துவது போன்ற எந்தவிதமான செயல்களையும் செய்யக் கூடாது. மன இலகுவாக இருக்கும் போது, பாலுறவு நடந்தால், அது நல்ல ஆர்காசத்தை வழங்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதே என்று மணமக்கள் வரம்பு மீறிவிடக்கூடாது..!!

பாலுறவு உயரிப்புடன் இருக்காது

ஒருவர் நீண்ட நாட்களாக பாலுறவு கொள்ளாமல் இருந்தால், அவருக்கு பாலியல் உறவு மீது ஆர்வமில்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. இது பலருக்கும் இருக்கும் பொதுவான கருத்தாகும். இது எந்த விதத்திலும் உண்மை கிடையாது. உடல்ரீதியான பிரச்னை, மருந்து மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றால் பாலியல் தூண்டல் பாதிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் பாலியல் சுகம் மறந்துபோகாது. காலத்துக்கு ஏற்றார் போல, பாலியல் சார்ந்த சிந்தனைகள் உங்களை பக்குவப்படுத்தும். 

Latest Videos

click me!