கூடுதல் பவருக்காக பெண்கள் வயாகரா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

First Published | Jan 26, 2023, 4:20 PM IST

ஆண்களில் சிலர் விறைப்பு செயலிழப்பு பிரச்சினை இருந்தால் வயாகராவை உபயோகிக்கிறார்கள். அதே போல அந்த மாத்திரையை பெண்கள் எடுத்து கொண்டால் என்னாகும் என்பது குறித்து இங்கு காணலாம். 

உடலுறவு கொள்ளும்போது இருவரும் ஆற்றலோடு இயங்க வேண்டியது அவசியம். இணையின் மனம் புரிந்து அதன்படி நடந்து கொள்பவர்தான் நல்ல பார்ட்னர். சில பெண்கள் தங்கள் இணையை திருப்தி செய்ய முடியவில்லை என்பதால் பல வழிகளஒ தேர்வு செய்கிறார்கள். அதில் வயாகராவை பாலியல் உச்சக்கட்ட தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பெண்கள் பயன்படுத்தலாம் என்பது இப்போது பேசப்பட்டு வருகிறது. அது ஆபத்தா? இல்லையா என்பதை இங்கு காணலாம். 

பாலியல் வாழ்க்கையில் வரும் தாமதமான உச்சக்கட்டம் அல்லது விரைவான உச்சகட்டம் ஆகிய பிரச்சனைகளுக்கு வயாகரா உதவுகிறது. பெண்களுக்கு பாலியல்ரீதியாக வரும் பிரச்சினைகளில் ஒன்று பாலியல் ஆர்வமின்மை, உடலுறவில் விருப்பமின்மை. இது சில நேரங்களில் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய் நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். 


பாலியல் ரீதியாக தூண்டப்படுதல் பிரச்சனை உள்ளவர்கள் வயாகரா மாத்திரையை உண்ணலாமா? எனக் கேட்டால் உண்ணலாம் என்பதே பதில். ஆனால் பாலியல் நாட்டம் இல்லாத பெண்களுக்கு பயன் அளிக்காது. பாலியல் ஆசை உள்ள பெண்கள் எடுத்து கொள்ளும்போது பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் அதிக உணர்திறன், மேம்பட்ட பாலியல் தூண்டுதல் ஏற்படும்.  

அறிகுறிகள் 

தலைசுற்றல், தலைவலி, குறைந்த இரத்த அழுத்தம், கண்கள் முன்னால் ஒளி தோன்றுதல் மனச்சோர்வு, தீராத கவலை பெண்களுக்கு பாலியல் செயலிழப்பை தூண்டலாம். உடலுறவு தொடர்பான நீண்டகால மோதல்கள் கூட உங்கள் பாலியல் உறவைப் பாதிக்கலாம். தனித்தனியாகவோ அல்லது தம்பதியாகவோ உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை மூலம் பிரச்சனையை தீர்க்க முடியும். 

இதையும் படிங்க: பெண்களின் உச்சக்கட்டம் பத்தி ஆண்கள் நினைக்குறது முழுக்க தப்பாம்... எப்படி செயல்பட்டால் சக்சஸ் ஆகும்?

covid viagra

உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்து, கிரீம்கள், யோனி வாயிலாக நிர்வகிக்கப்படும் மருந்துகள் அல்லது வாய்வழி மருந்துகள் ஆகியவை மூலம் ஹார்மோனை சமநிலைப்படுத்த பரிந்துரைக்கப்படலாம். 

வயாகரா எனும் நீல மாத்திரை ஆண்களின் இரத்த நாளங்களை விரிவாக்கவும், ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். அதை போல பெண்களுக்கும் பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என நிபுணர் தெரிவிக்கின்றனர். இது பாலியல் செயல்பாடு, உணர்திறன் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க உதவும். இருப்பினும், இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிற மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த பக்க விளைவுகள் ஆண்கள் அனுபவிக்கும் அதே பக்க விளைவுகள் போல் இருக்கலாம். வயாகரா அல்லது பிற விறைப்புச் செயலிழப்பு மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் கவனமாக இருங்கள். ஆணோ, பெண்ணோ கடுமையான கண் பிரச்சனைகள் உருவாகும். 

இதையும் படிங்க: சாம்பல் பூசி பிணத்துடன் கொடூரமாக உடலுறவு கொள்ளும் அகோரிகள்.. திகிலூட்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

Latest Videos

click me!