சிலருக்கு சின்னவயதில் இருந்து தவறான செக்ஸ் கற்பனைகள் இருந்திருக்கும். ஏனெனில் நம் நாட்டில் செக்ஸ் குறித்த புரிதல்கள் எல்லோருக்கும் இல்லை. குழந்தைகள் இதை வெளிப்படையாக பேசவும்மாட்டார்கள். வளரும்போது இந்த பிரச்சனைகள் வேறுமாதிரி தலைதூக்குகிறது. கல்லூரி படிக்கும்போது தோழர்களுடன் செக்ஸ் படங்கள் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.
இதனால் சிலர் கூட படிக்கும் பெண்கள், உறவுக்கார பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சிலர் இந்த எண்ணங்களை மனதில் வைத்து புழுங்கி கொண்டிருக்கிறார்கள். சிலர் பிறரிடம் தவறாக நடந்து கொள்ளவும் செய்கிறார்கள். அதாவது, வாய்ப்பு கிடைக்கும் போது அத்துமீறிவிடுகிறார்கள். சிலர் வெறுமனே சுய இன்பம் செய்துவிட்டு அமைதி காக்கிறார்கள்.
இந்த சூழலில் ஒரு வாசகர் தான் சகோதரி முறை இருக்கும் பெண்ணை நினைத்து சுயஇன்பம் செய்துவிட்டதாக புலம்பி தவிக்கிறார். இதனால் அவருக்கு மனதின் அடியாளம் வரை குற்றவுணர்ச்சி வந்து நிம்மதியே கெட்டுவிட்டதாம். பெயர் வெளியிடவிரும்பாத அந்த வாசகருக்காக நிபுணரிடம் ஆலோசனைகளை பெற்று இங்கு வழங்கிருக்கிறோம்.
"எப்போதாவது செக்ஸ் படங்கள் பார்க்கும்போது அது பிரச்சனையாவதில்லை. ஆனால் அதற்கு அடிமையாகி உடன் படிக்கும் பிள்ளைகளையும், உறவுக்காரர்களையும் காமவெறியோடு அணுகுவது நல்ல விஷயம் அல்ல. யாருக்கும் பாதகமில்லாத சுயஇன்பம் தவறு இல்லை. ஆனால் சகோதரிமாதிரியான பெண்ணுடன் கற்பனை செய்வது மோசமான விளைவுகளில் கொண்டுவிடும். இதனை இன்செஸ்ட் (Incest) என்பார்கள்.
முந்தைய காலத்தில் மனிதனுக்கு உறவு முறைகள் இல்லை. ஆனால் நாகரிக காலத்தில் மனிதன் குடும்பம் என்ற அமைப்புடன் வாழ ஆரம்பத்துவிட்டான். அதன் பிறகு இன்செஸ்ட் உறவுகளை சமூகம் அனுமதிப்பதில்லை. அதனால் உங்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உங்கள் மனம் சமூகத்திற்கு கட்டுப்படவும், ஒழுக்கமாக இருக்கவும் விரும்புவதை தான் காட்டுகிறது. இனி அதுமாதிரியான விஷயங்களை குறைத்து கொள்ள முயலுங்கள். தகாத செக்ஸ் விருப்பங்களால் வீழ்ந்தவர்கள் ஏராளம்.
நீங்கள் தனி மனிதன் என்பதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைப்பது தனிப்பட்ட விஷயங்களுக்கு சரி. சகோதரிமாதிரி உறவு கொண்ட பெண் முதல் நீங்கள் காணும் மற்ற பெண்கள் மீது உங்கள் உரிமை செல்லுபடியாகாது. உங்களுடைய தவறான பார்வை, தொடுதல், வார்த்தை எதுவும் உங்களை மீறி அந்த பெண்களிடம் செல்லுன்போது அது சட்டப்படி குற்றம்.
இதையும் படிங்க: கணவரை ஈஸியா ஏமாத்தி கள்ள உறவு கொள்ளும் பெண்கள்.. கையும் களவுமா மாட்டிக்கிட்டா இதை சொல்லி தப்பிச்சுடுறாங்க..!
இந்த எண்ணங்கள் பதட்டத்துடன் தீவிர பயத்தையும் உருவாக்குகின்றன. இந்த எண்ணங்களை நிறுத்த முயற்சி செய்யும்போது, அது எல்லா திசையில் இருந்தும் உங்களுடைய தலையில் உதிக்கும். அதனால் நல்ல எண்ணங்கள் மூலம் அதை வெற்றி கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கே தவறு என தோன்றும் நிலையில், பாதி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. இனி அப்படி தவறான செக்ஸ் கற்பனைகளை சிந்தித்தால், அந்த நேரத்தில் மற்ற நல்ல நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுங்கள். ஜிம் போவது, புத்தகங்கள் படிப்பது, நல்ல படங்களை பார்ப்பது, தோட்ட பராமரிப்பு என விருப்பமான காரியங்களை செய்யுங்கள். பின்னும் அந்த பிரச்சனை தொடர்ந்தால் ஒரு நல்ல மனநல ஆலோசகரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்" என நிபுணர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: அடிக்கடி சுயஇன்பம் காணும் ஆளா நீங்கள்.. அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?