இந்த 'வார்த்தை' மட்டும் மனைவி கிட்ட சொல்லவே கூடாது.. தாம்பத்திய மந்திரம் அறிவோம்!!

First Published | Feb 4, 2023, 5:21 PM IST

தாம்பத்தியம் சிறப்பாக இருக்க விரும்புபவர்கள் மனைவியிடம் பேசும்போது சில வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். 

இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் போது தான் அந்த வாழ்க்கை இனிக்கும் யாரேனும் ஒருவர் புரிந்து கொள்ளாமல் விலகினால் ஒவ்வொரு நாளும் நரகமாக மாறும் தாம்பத்தியம் சிறப்பாக இருக்க கணவனும் மனைவியும் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று மந்திரங்களை இங்கு காணலாம். 

கணவனும், மனைவியும் தங்களுடைய அந்தரங்க நேரத்தை இரவில் தான் செலவிட முடியும். பகல் முழுக்க வேலை, மற்ற பிரச்சனைகளில் கவனம் இருந்தாலும் இரவில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தவறாமல் நேரம் செலவிட வேண்டும். தாம்பத்தியத்தை ஆரம்பிக்கும்போது மெதுவாக தொட்டு தொடங்கி, உச்சக்கட்டத்தை அடைவதே நிறைய இன்பம் அளிக்கும். உடலுறவுக்கு முன்விளையாட்டுகளில் கொஞ்சம் ஈடுபடுங்கள். இதில் இன்பமும், ஆர்வமும் கூடும். மனைவியின் உடலை அறிந்து அவர்களுக்கு இன்பம் கொடுக்கும் பகுதிகளில் விளையாட்டு காட்டுங்கள். இதே விதியை கணவனை மகிழ்விப்பதிலும் பொருத்தி கொள்ளலாம். உடல்களை அறிவதுதான் மந்திரம் 1. 

Tap to resize

உங்களுடைய துணையை கொஞ்சி கொள்ள மறக்காதீர்கள். குழந்தைகளை மடியில் படுக்க வைத்து எப்படி வெட்கமே இல்லாமல் கொஞ்சுவீர்களோ, அதைப் போல வாழ்க்கை துணையை செல்லம் கொஞ்சுங்கள். அது உங்களுடைய தாம்பத்தியத்தை மேம்படுத்தும். 

Image: Getty Images

வாழ்க்கைத் துணையின் கன்னத்தை கிள்ளுவது, கைகளை கோர்த்துக்கொள்வது, முத்தமிடுவது என கொஞ்சலுக்கு நடுவே அவருடன் செல்ல விளையாட்டுகளையும் முயன்று பாருங்கள். ஏன் திடீரென கொஞ்சல் என கேட்டால், அவர்களை உரிமையாய் முத்த மழையில் நனையவிடுங்கள். கொஞ்சல் மொழிதான் தாம்பத்திய மந்திரம் 2. 

மனைவியின் பொழுதுபோக்கை, வேலையை, ஆசையை கிண்டல் செய்வது தாம்பத்தியத்தை மோசமாக்கும். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஊக்குவிக்கும் மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களுடைய பேஸ்புக் ஸ்டேட்டஸ், சீரியல் ரசனை போன்றவற்றை கிண்டல் செய்யக் கூடாது. 'அறிவில்லாம இதை போய் பண்ற அல்லது இவ்வளவு அறிவு இருக்கே ஆனாலும் இதை செய்யுற' போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொழுதுபோக்கு இருக்கும்.

கிரிஞ்சா இருந்தாலும் என்னோடதாக்கும்னு நெருங்கி போகணும். அதை விட்டு ஓவராக பேசினால் வீண் சண்டையில் தான் முடியும். எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை. இதுவே தாம்பத்திய மந்திரம் 3. இந்த மந்திரங்களை கடைபிடித்து துணையை இன்பமாக பார்த்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: இந்த அறிகுறிகள் இருக்கா? உங்க துணை செக்ஸுக்கு அடிமையா ஆகுறாங்கனு அர்த்தம்..

இதையும் படிங்க: இந்த பொசிஷன்ல செக்ஸ் வைத்தால்.. உடல் எடை கிடுகிடுனு வேகமா குறைஞ்சிடுமாம் தெரியுமா?

Latest Videos

click me!