உடலுறவில் கிரங்கடிக்கும் உச்சக்கட்டம்! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

First Published | May 30, 2023, 8:13 PM IST

இல்லறம் சிறக்க தாம்பத்தியம் நல்ல முறையில் இருக்க வேண்டும். கணவன், மனைவி உறவில் சிறப்பாக செயல்பட பயனுள்ள குறிப்புகள்... 

மகிழ்ச்சியான தாம்பத்தியம் என்றால் பூரணமான புணர்வு. இதில் வெறும் உடல் மட்டுமின்றி உணர்வும் மனமும் இணைய வேண்டும். உடலுறவின் உச்சகட்ட நிலையில், தசைகள், இரத்த நாளங்கள், மகிழ்ச்சி ஹார்மோன்களில் ஒன்றான எண்டோர்பின்கள் சுரப்பு எல்லாம் நிகழும். உச்சக்கட்டம் அடைய கணவன், மனைவி செய்ய வேண்டிய டிப்ஸ்... 

தாம்பத்தியம் 

தாம்பத்தியம் கொள்வது குழந்தைப்பேறுக்கு மட்டும் கிடையாது. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உடலுறவு அவசியம். காதலும், காமமும் இருக்கும் உறவில் தாம்பத்தியம் தயக்கம், வெட்கம் எல்லாம் இருக்க கூடாது. கணவன் மனைவி கூச்சம் இல்லாமல் உடலை ரசிக்கவும், உடலுறவில் ஈடுபடவும் தொடங்கிவிட்டால் அங்கு உச்சக்கட்டம் தானாக நிகழும். 

Tap to resize

கட்டாயம் கூடாது! 

கணவனோ மனைவியோ யாரோ ஒருவருக்கு உடல் அல்லது மனதளவில் வருத்தம் இருந்தால் அப்போது தாம்பத்தியம் வேண்டாம். உடலுறவு உடலும் மனமும் இணையும் அற்புத தருணம். தம்பதிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கூட உடலுறவின் போது பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவரையொருவர் கட்டாயப்படுத்தக்கூடாது.  

ஆணுறுப்பு அளவு 

உடலுறவில் ஆணின் உறுப்பு விஷயமே இல்லை. சிறிய ஆணுறுப்பால் உடலுறவில் திருப்தி இருக்காது என நினைப்பது வெறும் கட்டுக்கதையே. அப்படி கிடையாது. அதைப் போல சிறிய மார்பகம் இருக்கும் பெண்களும் தாழ்வு மனப்பான்மை கொள்ள கூடாது. இது தாம்பத்திய ஈடுபாட்டை குறைக்கும். உடலுறவில் உறுப்பு அளவுகள் முக்கியமில்லை. 

உணர்ச்சிமிகு இடங்கள்

ஆண் பெண் இருபாலருக்கும் உணர்ச்சி தரும் இடங்கள் பல உள்ளன. அந்தரங்க உறுப்புகளில் மட்டுமல்ல, காது மடல், தொடைகள் என பல இடத்திலும் உணர்ச்சி ததும்பும். இருவரும் ஒவ்வொருவருக்கும் இடையிலான உணர்ச்சிமிகு இடங்களை கண்டறிந்து தாம்பத்தியம் வைக்கும் போது மகிழ்ச்சியை வழங்கும். 

'நோ' அவசரம்

உடலுறவை பொறுமையாக செய்வது நல்லது. உடலுறவில் முன் விளையாட்டுகள் செய்வது இன்னும் இன்பத்தை பெருக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பொசிஷன் முயற்சி செய்யலாம். 

கெகல் உடற்பயிற்சி

கெகல் உடற்பயிற்சி (kegel exercise) அல்லது பெல்விக் பயிற்சி (pelvic floor) இடுப்புத்தளத்தின் தசைகளை வலுவாக்கும். இதனால் உடலுறவை சிறக்க செய்யும் உடற்பயிற்சியாக உள்ளது. இது உச்சகட்டத்தை அடைய ஆதரவாக இருக்கும்.  

Latest Videos

click me!