உடலுறவுக்கு முன் ஃபோர்பிளே... துணையுடன் 'ஜாலி' பண்ண.. சில டிப்ஸ்

First Published | Mar 3, 2023, 5:13 PM IST

Tips for foreplay: உடலுறவு வைத்து கொள்வதற்கு முன் பண்ண வேண்டி ஃபோர்பிளே எனும் செக்ஸ் விளையாட்டுகளுக்கு தேவையான சில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தாம்பத்தியம் ஆண்-பெண் இருவருக்கும் இன்பத் தேடல். மெல்ல மெல்ல கரைந்து போகும் சுக அனுபவம். ஆனால் சிலர் உடலுறவில் முழு இன்பம் காண்பதில்லை. உடலுறவுக்கு முன்னதாக கட்டி அணைப்பது, தொடுவது, முத்தம் கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து நேரடியாக விஷயத்திற்கு சென்றுவிடுகின்றனர். ஆனால் உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் செய்வது, தம்பதிகளிடையே உச்சகட்ட சுகத்தை உறுதி செய்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.  

செக்ஸுக்கு முன், வயிறு, இடுப்பு, தொடையின் உள்புறம், மார்பகங்கள் ஆகியவை மீது முத்தம் பொழிவது, மென்மையாக தடவி விடுவது ஆகியவற்றில் கவனம் வைக்க வேண்டும். ரொம்ப நேரம் கூட வேண்டாம் குறைந்தது 10 நிமிடங்களாவது முன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டுமாம். அதற்கான சில டிப்ஸ் இதோ..

Tap to resize

உடலுறவுக்கு முன்பு எண்ணெய், வாசனை திரவியங்களை உபயோகிக்கலாம். கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தலை முதல் பாதம் வரை மசாஜ் செய்து விடலாம். சிலர் துணையின் உடலில் சாக்லேட், தேன் ஆகிய இனிப்புகளை வைத்து சுவைக்கின்றனர். 

வாய் வழிப் புணர்ச்சியில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அதாவது ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அப்படி விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் வாய் வழிப் புணர்ச்சியில் துணையின் உடல் முழுவதாக தூண்டப்படும்.  

உடலுறவு கொள்ளும் சமயங்களில் மனதில் உணர்வதை அப்படியே பச்சையாக கூட பேசுங்கள். உங்களுடைய சிந்தனை, துணையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என அப்போது வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அப்படியான நேரத்தில் கூச்சத்திற்கு வேலையில்லை. 

இதையும் படிங்க: உடலுறவின்போது ​​உங்க துணை இந்த தவறை செய்கிறாரா? நோட் பண்ணுங்க..!

ஒரே மாதிரியாக தொடாமல் வித்தியாசமாக தொட வேண்டும். படுக்கையறையில் இணைந்து நடனம் ஆடலாம். இணைந்து குளிக்கலாம். குட்டி குட்டி செல்ல சண்டை போடலாம். அப்போதுதான் உறவு சுவாரசியமாக இருக்கும். 

இருவரும் தொட்டு உடல்களால் பேசுவதே சிறந்தது. துணையின் முகத்தைத் தடவுவது, தலை கோதி விடுவது, கைகள், இடுப்பு, தொடை போன்ற உணர்திறன் மிக்க உறுப்புகளை தொட்டு கொள்வது உறவை பலப்படுத்தும். 

இதையும் படிங்க: உடல்ரீதியாக ஈர்ப்பு வராத கணவன் மனைவி வாழ்க்கை என்ன கதியாகும்? செக்ஸ் உறவை தவிர்த்தால் மோசமான விளைவு

உடலுறவை விட பாலியல் முன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் இல்லறம் சிறக்கும். நம்பி முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்! 

Latest Videos

click me!