புதிய உறவை தொடங்குபவர்கள் எப்போது செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும்?

First Published | May 6, 2023, 1:14 PM IST

உடலுறவு வைத்த பிறகு சில ஆண்கள் தங்கள் துணையை விட்டு விலகிவிடுகின்றனர். அது எதனால்? காதலர்கள் உடலுறவு எப்போது வைத்து கொள்ள வேண்டும்? என்பதை இங்கு காணலாம். 

காதலிக்கும் போது உறவுகளில் பல வாக்குறுதிகள் கொடுக்கப்படும். அவை எல்லாம் நிறைவேற்றப்படுகிறதா? என்பது உறவை பொறுத்தது. ஆனால் காதலிப்பதை வெறும் செக்ஸுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தும் நபர்கள் இப்போது பெருகிவிட்டனர். அப்படி ஆன்லைனில் தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்து பெண் ஒருவர் தீர்வு கேட்டிருக்கிறார். 

அந்த கேள்வி:"நான் என் பாய்பிரெண்டோடு உறவு வைத்தேன். அதன் பிறகு அவர், எனக்கு மெசேஜ் செய்வதில்லை. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணரான ஜேக் மடாக் (Jake Maddock) பதிலளித்தார்.


இந்த விஷயத்தில் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என அந்த பெண்ணுக்கு மடோக் பதிலளித்துள்ளார். நீங்கள் மெசேஜ் அனுப்பலாம், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அதில் உங்கள் தவறு ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மெசேஜ் செய்வது தொல்லையாக மாறுமே தவிர அது ஒரு உறவாக மாறாது. இது குறித்த பதிவிற்கு பின்னர் மடோக் உடலுறவை குறித்தும், டேட்டிங் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

காதலுடன் பழகும்போது அந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. அப்போது சிலர் உடலுறவு கொள்கிறார்கள். அது விருப்பம் சார்ந்தது. நீங்கள் உடலுறவு கொண்ட பிறகு அந்த உறவை வேறு மாதிரி அணுக முடியும். உங்களுடைய துணை எப்படிப்பட்டவர் என்பது உடலுறவுக்கு பின் தெரியும். அவர் சிறந்த துணை என்றால், அவர் எப்போது வேண்டுமானாலும் உங்களை காதலிப்பார். 

உடலுறவு கொள்வது நேரத்தைப் பொறுத்தது அல்ல; விரும்பினால் உறவின் ஆரம்பக் கட்டத்திலே உடலுறவு கொள்ளலாம் என்று நிபுணர் கூறுகிறார். ஒருவேளை ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு அது ஏற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு உறவில் உணர்வுரீதியான புரிதல் இல்லாமல் இணையும் போது வெகுகாலம் அந்த தொடர்வது இல்லை என்பது தான் நிதர்சனமாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் செக்ஸ் இன்னும் கூட அதிகம் பேசப்படாத டாபிக். இங்கு அது வெறுமனே உடல் தேவைகளை மட்டுமில்லாமல், ஒழுக்கரீதியான சிந்தனைகளையும் வளர்த்து வைத்துள்ளது. ஒரு பெண்ணின் மீதான அதிகாரத்தை ஆணுக்கு வழங்குகிறது.

ஒரு நபரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், அது உடல்ரீதியான விருப்பமா, அல்லது உணர்வுரீதியான பந்தமா என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது குறித்த புரிதலுக்கு வந்த பிறகு இருவரும் பேசி அந்த உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். வெறும் காமத்திற்கான ஆண்/ பெண் அணுகலை காதல் என்று புரிந்து கொண்டு அவர்களிடம் நெருங்குவதால் உங்களுடைய நேரம், அன்பு, மெனக்கெடல்கள் எல்லாம் வீண்! மேலே சொன்ன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு காமத்தை தாண்டியும் உறவு தேவைப்பட்டது. அந்த ஆண் காமத்தோடு முடித்து கொண்டார். மக்களே! இது மாதிரியான அவசர உறவுகளில் ஈடுபடாதீர்கள். காயம் தான் மிஞ்சும். யோசித்து செயல்படுங்கள். 

Latest Videos

click me!