பல தம்பதிகள் சில தவறுகளை செய்வதால் தங்கள் பாலியல் வாழ்க்கையையே வீணடித்து கொள்கிறார்கள். செக்ஸ் உறவு கொள்ளும்போது "முடிவில்" மட்டுமே கவனம் வைத்தால் பெண்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். ஒருவரின் உடலை ஒருவர் தொட்டு தழுவி கொள்ளும்போது தான் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிறது. அதை போல ஆண்களை தொடாத பெண்கள் தங்களுடைய கணவரிடம் இடைவெளியை சந்திப்பார்கள். ஆண்களை தொட்டு தழுவும் துணைகளிடம் அவர்கள் மயங்கிவிடுவார்களாம்.
உங்களுடைய மனைவி/ காதலியை பிறரோடு ஒப்பீடாதீர்கள். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பின்மை (insecurities) அதிகரிக்கிறது. நாளடைவில் மனக்கசப்பு வரும். நீங்கள் கோபத்தில் இப்படிச் செய்தாலும், கடைசியில் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையும் அழித்துவிடுகிறீர்கள்.
உங்கள் மனைவி மன அழுத்தத்திற்கு அல்லது உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கும் சமயத்தில், அவர்களின் நலனைப் பற்றி கேட்பதற்குப் பதிலாக, உடலுறவு வைத்து கொள்வது பற்றி கேட்டால், அந்த உறவு மீது அதிருப்தி வரும். உடலுறவின் மீதும் வெறுப்பு ஏற்படும். மன அழுத்தம் இருப்பவர்கள் எப்போதும் உடலுறவை விட்டு விலக நினைக்கிறார்கள்.