பாலியல் விஷயங்களில் அடிமையானவர்கள் மனச்சோர்வு, பதட்டம், பாலியல் விரக்தி போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள். பாலியல் அடிமைத்தனம் பாலின வேறுபாடின்றி அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல். ஒருவர் தன்னுடைய தொழில், சமூக வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கொண்டிருக்கும் பாலியல்ரீதியான எண்ணங்கள், கற்பனைகள், பாலியல் நடத்தை பாலியல் அடிமைத்தனத்தை குறிக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் பாலியல் நடத்தை, ஆசைகள் வேறுபட்டாலும் அது பிரச்சனையாக உருவெடுக்காத வரை கவலையில்லை. உங்கள் துணை பாலியல் அடிமையா? நீங்கள் பாலியல் அடிமையா? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் துணை அடிக்கடி சுயஇன்பம் செய்பவராக இருக்கலாம். அடிக்கடி ஆபாச படங்கள் பார்ப்பது, திருமணத்தை மீறி உறவு உள்ளிட்ட பாலியல்ரீதியான விஷயங்களில் மூழ்கியிருந்தால் அவர் பாலியல் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளார் என அர்த்தம்.
உங்களிடம் பாலியல்ரீதியான விஷயங்களில் பொய் கூறுவது, அதை குறித்து மறைக்க முயற்சி செய்வது அவர்களின் பாலியல் அடிமைத்தனத்தை காட்டுகிறது. இது அவர்கள் பாலியல் விஷயத்தை சார்ந்து அதற்கு அடிமையாகி வருவதை குறிக்கும். உதாரணமாக உங்களுடைய துணை, செக்ஸ் விஷயங்களில் காட்டும் அதிக ஈடுபாடால் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி பிரச்சனை வருவது தெரிந்தும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்பதே அப்பட்டமான உண்மை.
Image: Getty Images
எப்போதும் ஒரே அளவில் திருப்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக உறவு கொள்ளும்போது எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறாரா? ரொம்ப உணர்ச்சிகரமாக அவர் நடந்து கொண்டால் பாலியல் அடிமையாகிவிட்டார் என்பதன் அறிகுறிதான் அது.
Image: Getty Images
குடும்பம், அலுவலகம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பொறுப்பு கொள்ளாமல் அதை தவிர்ப்பார். ஆனால் பாலியல் நாட்டங்களில் மட்டும் கவனம் செலுத்துவார். இதுவும் அறிகுறிதான். எப்போதும் புதுவகையான செக்ஸ் அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என எல்லா விஷயங்களை விட்டுவிட்டு அதை பற்றியே யோசிப்பதும் பாலியல் உறவுக்கு அடிமையாவதன் அறிகுறிதான்.