உடலுறவுக்கு ப்ளேவர்டு ஆணுறைகளை பயன்படுத்தக்கூடாது - ஏன் தெரியுமா.?

First Published | Dec 19, 2022, 5:39 PM IST

உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ப்ளேவர்களில் உள்ள ஆணுறைகள்  பயன்படுத்துவதை ஏன் நிறுத்த வேண்டும் என்பது இங்கே பார்க்கலாம்.

ஆணுறை (காண்டம்) என்பது உடலுறவின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உறை ஆகும். இதன் மூலம் வேண்டாத கர்ப்பம், பாலுறவு சம்பந்தமான நோய்கள் இவைகள் வராமல் தடுக்க முடியும். இந்த காண்டங்கள் தற்போது எல்லாம் நிறைய வடிவங்களிலும், வண்ணங்களில் ஏன் ப்ளேவர்களில் கூட சிறிய பாக்கெட் வடிவில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பமான ஆணுறையானது தற்போது பல்வேறு ப்ளேவர்களில் கிடைக்கிறது.

அவை சாக்லேட், பப்பில்கம், ஸ்ட்ராபெரி என பல ப்ளேவர்களில் கிடைக்கிறது. நீங்கள் இதனை தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் இதைப் படிக்க வேண்டும். உடலுறவுக்கு பல ப்ளேவர்களில் ஆன ஆணுறைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த வகையான ஆணுறைகளில் இருக்கும் சர்க்கரையின் அளவே அதற்கு காரணமாகும்.


இது உங்கள் யோனியில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆணுறைகளின் அதிக சர்க்கரையானது,  ஈஸ்ட் தொற்றுநோயை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இவை பெண்ணின் பிறப்புறுப்பில் பி.எச் (pH) அளவை மாற்றக்கூடும். இதன் விளைவாக உங்கள் பெண் துணைக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படலாம். ஆணுறையின் இரசாயன உள்ளடக்கம் அதிகரிக்கும் போது யோனி எரிச்சல் அல்லது கடுமையான ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

பல்வேறு சுவைகள் கொண்ட ஆணுறைகள் வாய்வழி உடலுறவுக்காகவே தயாரிக்கப்பட்டன. ஆணுறைகளுக்கு பல்வேறு சுவைகளை அறிமுகப்படுத்துவதற்கான காரணம், லேடெக்ஸ் ரப்பர் வாசனையை மறைக்கவே இவை உருவாக்கப்பட்டது.  ஒரு நபர் கர்ப்பமாக இருக்க விரும்பவில்லை என்றால், தம்பதியினர் இன்னும் குழந்தைகளைப் பெறத் தயாராக இல்லை என்றால் ஆணுறைகளை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது, ஆணுறை பேக்கில் உள்ள காலாவதி தேதியைச் சரிபார்க்கவும். ஒவ்வொரு முறையும் புதிய ஆணுறை பயன்படுத்தவும். பயன்பாட்டிற்குப் பிறகு அதை சரியாக அகற்ற மறக்காதீர்கள். ஏதேனும் பாலியல் தொற்று ஏற்பட்டுள்ளதா என வழக்கமான பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏதேனும் தொந்தரவு அறிகுறிகள் இருந்தால், உடனே உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

Latest Videos

click me!