செக்ஸ் வாழ்க்கையில் இதை செய்யாவிட்டால், விவாகரத்து கூட ஆகலாம்.. உங்கள் துணை என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா?

First Published | Mar 4, 2023, 2:42 PM IST

Sexual Problem: தாம்பத்திய வாழ்க்கையில் உங்கள் துணை உங்களிடம் என்ன விரும்புகிறார் என அறிந்து கொள்ளுங்கள். 

இன்றைய உலகில், தனது துணையுடன் நல்ல நேரத்தை செலவிடவும், பாலியல் வாழ்க்கையைப் பற்றி பேசவும் கூட நேரமில்லாமல் சிலர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பல தம்பதிகள் பாலியல் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இருக்கின்றனர். சிலருக்கு விவாகரத்து கூட ஆகிவிடுகிறது. 

உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக வைத்திருக்க விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். எப்போதும் பாதுகாப்பான உடலுறவை மட்டுமே பயிற்சி செய்யுங்கள். அதுவே இருவருக்கும் நல்லது. உங்களுக்கு எத்தனை செக்ஸ் பார்ட்னர்கள் இருந்தாலும் அது தனிப்பட்ட விருப்பம். ஆனால் எல்லோருடனும் பாதுகாப்பாக மட்டுமே உறவு கொள்ள வேண்டும். ஆணுறைகள் இல்லாமல் இஷ்டத்திற்கு உறவு கொண்டால் பரவும் பாலியல் நோய்களை (STDs) வாங்கி கொள்வீர்கள். 


ஆணுறைகள் பரவும் பாலியல் நோய்களில் இருந்து காப்பது ஒருபக்கம் இருந்தாலும், விரும்பாத கர்ப்பத்தை தடுப்பதிலும் உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஏதோவொரு உந்துதலால் ஒன் நைட் ஸ்டாண்ட் எடுத்துவிட்டால், அதாவது ஒருநாள் இரவு மட்டும் உறவு கொள்கிறீர்கள் என்றால் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

முதலாவது அந்த உறவு கொள்ளும் நபர் எப்படிப்பட்டவர்? அவருக்கு பாலியல் ரீதியான ஏதேனும் நோய் இருக்கிறதா? அவருக்கு உங்களுடன் இருக்க முழுவிருப்பமா என்பதை அறிவதுதான் அது. மனைவியுடன் உறவு கொள்ளுதலே உள சிக்கலையும், உடல் சிக்கலையும் தவிர்க்கும். இங்கு திருப்தி இல்லை என மற்றொரு துணையை தேடி போனால் பிரச்சனை இருமடங்காகும், சிலருக்கு விவாகரத்தும் ஆகலாம். சரி இதற்கு என்ன செய்யலாம்? 

கழிவறை இருக்கை எனும் புத்தகத்தில் இல்வாழ்க்கையை பற்றி சில விஷயங்கள் பட்டவர்த்தனமாக போட்டிருப்பார்கள். அதாவது கணவன் மனைவிக்கு இடையில் ஒருமித்த புரிதல் இருந்தால் மட்டும் தான் இல்வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அதில் ஒரு விஷயம் இங்கு சொல்கிறேன்... கணவனோ/ மனைவியோ தன் இணையின் பாலியல்ரீதியாக திருப்தி குறித்து அக்கறை காட்டாமல் இருப்பார்கள் எனில் அவர்கள் இன்னொரு துணையை தேடி கண்டடையும்போது கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது.. 

முதலில் உங்கள் துணையின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறியவேண்டும். குறிப்பாக செக்ஸ் பற்றி பேசும் துணையை சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். இப்போது ஏகப்பட்ட சீரிஸ், கட்டுரைகள் என செக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஒருவேளை நல்ல செக்ஸ் அறிவுள்ள பார்டனர் கிடைத்தால் கொண்டாடுங்கள். சந்தேகத்தீயில் போட்டு வதைக்காதீர்கள். 

இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் ஃபோர்பிளே... துணையுடன் 'ஜாலி' பண்ண.. சில டிப்ஸ்

Cuddling after sex

நீங்கள் செக்ஸ் உறவை வைத்து கொள்ள விரும்பினால், உங்கள் துணையின் சம்மதத்துடன் செய்யுங்கள். அவருக்கு அது வசதியாக இல்லாதபட்சத்தில், நீங்கள் அவரை கட்டாயப்படுத்தி இந்த காரியத்தை ஒருபோதும் செய்யக்கூடாது. அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் துணைக்கு தெரிவிப்பது அவசியம். அவர் விரும்புவதையும் நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம். இப்படி வாழ்ந்தால் கொண்டாட்டமான வாழ்க்கை கிடைக்கும். 

இதையும் படிங்க: முதல் தடவை ட்ரெஸ் இல்லாமல் பெண்ணின் வெற்று உடலை பார்க்கும்போது.. ஆண்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா?

Latest Videos

click me!