டெக்னாலஜி வளர்ந்த இக்காலக்கட்டத்திலும் பாலியல் குறித்த விவாதங்கள் இன்னும் இயல்பாகவில்லை. ஆனால் உடலுறவு கொள்வது ஒரு நபரின் ஆரோக்கியத்தில் மிக பெரிய நன்மையை செய்யவல்லது. ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, உடலுறவு ஆயுர்வேதத்தின் சுக்ரா எனப்படும் ஏழு திசுக்களுடன் சம்மந்தப்பட்டது. சுக்ரா எனும் தாது ஆண்களின் விந்து, பெண்களின் கருமுட்டை திசுக்களுடன் தொடர்புடையது. அவை ஆரோக்கியமாக இருந்தால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, உடலுறவை சரியான புரிதல் இல்லாமல் செய்யும்போது நமது நோயெதிர்ப்பு அமைப்பு, முக்கிய ஆற்றல் ஓட்டத்தை ஆழமாக பாதிக்கிறது. பருவ காலங்களில் குளிர்காலம், வசந்த காலத்தில் உடலுறவு வைப்பது சிறந்தது என ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால் கோடையில் அதிக முறை உடலுறவு கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.
கோடையிலும், மழைக் காலங்களிலும் பித்த, வாத ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் பாலியல் செயல்பாடு குறையும். இந்த நேரங்களில் இனப்பெருக்கத்திற்கான உயிர்ச்சக்தி மிகக் குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இப்படி பொருத்தமில்லாத நேரங்களில் உடலுறவு வைத்தல் நல்லதல்ல. ஆயுர்வேதத்தில் பரிந்துரைத்துள்ள சில மூலிகை கலவைகளை பயன்படுத்தினால் நல்லது.