செக்ஸ் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி கண்டிப்பா பண்ணிடுங்க!

First Published | May 3, 2023, 7:26 PM IST

கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் சலிக்காமல் சுவாரசியமாக இருக்க அவ்வப்போது சில விஷயங்களை முயன்று பார்க்க வேண்டும். 

தாம்பத்திய வாழ்க்கையில் வெறும் காமம் மட்டும் போதாது. சில உரையாடல்கள், விளையாட்டுகள், சின்ன சண்டை, செல்ல கோபம் எல்லாமே இருக்கும்போது தான் அந்த உறவு முழுமையடைகிறது. அவ்வப்போது ஏதேனும் ரொமாண்டிக்காக செய்யும்போது தான் அந்த விஷயங்களில் இருவருக்கும் ஆர்வம் நிலைத்திருக்கும். இங்கு சில பயனுள்ள டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள். 

உங்களுடைய பார்ட்னருடனான அந்தரங்க நேரத்தில் டைமர் வைத்து விளையாடி பாருங்கள். உங்கள் துணையிடம் நெருக்கமாக இருக்கும் தருணங்களில், கொஞ்சம் ஏக்கம் வர வைக்கும் விதமாக இந்த விஷயத்தை முயன்று பாருங்கள். உங்களுடைய செல்போனில் டைமர் (timer ) ஆன் செய்துவிடுங்கள். ஒருவரையொருவர் எவ்வளவு நேரம் தொடாமல் படுக்கையில் இருக்க முடிகிறது என முயன்று பாருங்கள். யார் முதலில் தீண்டுகிறார் என்று பார்த்துவிடுங்களேன்.. 

Tap to resize

உங்கள் துணையின் கண்களை மூடிக்கொண்டு அவர்களின் விருப்பமான விஷயங்களை செய்து அசத்தலாம். உதாரணமாக நீங்கள் நன்றாக பாடுவீர்கள் என்றால் அவர்களுக்கு உங்களின் இன்னிசை கானத்தை தரலாம். உணவு ஊட்டிவிடலாம். முத்தமழை பொழியலாம். நினைவிருக்கட்டும் இது துணையின் கண்களை மூடிவிட்டு செய்யும் விஷயங்கள் மட்டும்தான். 

இது கொஞ்சம் வேடிக்கையானது. மிகவும் தனிமையான இடம் தேவை. உங்கள் வீட்டுக்குள் மாடி படிக்கட்டுகள் இருந்தால் நல்லது. உங்களுடைய படுக்கை அறையில் பாய்/போர்வையில் அல்லது படிக்கட்டுகளில் வாய்வழி உறவை முயற்சி செய்யுங்கள் இந்த அனுபவம் வித்தியாசமானதாகவும் உங்களுக்கிடையான நெருக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும். 

தம்பதிகளுக்குள் ரோல் பிளே செக்ஸ் வைத்துக் கொள்வது அந்த இரவை சுவாரசியமாக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு கதாப்பாத்திரமாக மாறி ஒருவரை ஒருவர் இம்ப்ரஸ் செய்து உறவு கொள்வது. நிர்வாணம் இதில் வித்தியாசமான அனுபவத்தை தரும். உதாரணமாக, உடலில் ஓவியங்கள் வரையும் ஓவியராக நீங்களும், ஓவியத்தை தாங்கும் காகிதமாக மனைவியும் கதாப்பாத்திரம் எடுத்து முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: மாதவிடாய் சமயத்தில் உடலுறவு.. அதுல இவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

தாம்பத்தியத்தில் மெயின் பார்ட்.. உடலுறவு தான். அதற்கு செல்வதற்கு முன் துணையின் காது மடல்களில் முத்தம், கழுத்தில் நாவால் வருடுவது, தொடைகளை கொஞ்சுவது, விரல்களை கோர்ப்பது... இவை எல்லாம் செய்வதும் முக்கியம். சிறந்த உடலுறவுக்கு முன்விளையாட்டு அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: ஆண்களே! ப்ளீஸ் செக்ஸ் வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை பண்ணாதீங்க!

Latest Videos

click me!