இவர்களுக்கு தான் பாலியல் ஆசை அதிகம் இருக்குமாம்.. செக்ஸ் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..

First Published | Aug 21, 2023, 1:05 PM IST

உங்களை ஆச்சர்யப்படுத்தும் செக்ஸ் பற்றிய இந்த 5 விசித்திரமான உண்மைகளை தற்போது பார்க்கலாம்.

செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு பலர் தயங்கினாலும்,  உடலுறவு பற்றி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொள்கின்றனர். எனவே 5 ஆச்சரியமான பாலியல் தொடர்பான உண்மைகள் குறித்து பார்க்கலாம். 

செக்ஸ் பற்றிய கனவு:

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் நடத்திய ஆய்வில், ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கனவுகளை செக்ஸ் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பலருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆண்கள் கனவு காண்கின்றனர். பெண்கள் பிரபலங்கள், அரசியல்வாதிகள், முன்னாள் காதலர்கள் அல்லது அவர்களின் தற்போதைய துணையுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Tap to resize

செக்ஸ் தலைவலியை குணப்படுத்தும்.

வேக் ஃபாரஸ்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வின்படி, நம்பமுடியாத அளவிற்கு, ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலியல் ஆசை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூளை இரசாயன மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

சாக்ஸ் அணிவதால் உச்சக்கட்டம்

க்ரோனிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, உடலுறவின் போது சாக்ஸ் அணிவது உச்சக்கட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது, இருப்பினும் சரியான காரணம் தெளிவாக இல்லை. குளிர்ச்சியான கால்கள் பாலின மனநிலையையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே சாக்ஸ் அணிந்து உடலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்டத்தை அடைய முடியுமாம். 

பாலியல் ஆசை இழப்பு

உடலுறவு கொள்ளாமல் அதிக நாட்கள் சென்றால் பாலுணர்வை இழக்க வாய்ப்புள்ளது. பெண்குறிக்கு போதுமான ரத்த ஓட்டம் செல்லாததால் பாலுணர்வை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

உச்சக்கட்டம் அடையும் பெண்கள்

கலிபோர்னியாவைச் சேர்ந்த திருமண மற்றும் பாலியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், ஒரு பெண் ஒரு மணி நேரத்தில் 134 உச்சக்கட்டத்தை அடைவதை ஆய்வாளர்கள் கண்டனர், அல்லது ஒவ்வொரு நிமிடமும் 2.2 முறை.  அதேசமயம், ஒரு மணி நேரத்திற்கு ஆண்களின் உச்சக்கட்டத்தின் பதிவு 16 ஆகும்.

Latest Videos

click me!