உங்கள் துணையுடன் இணைந்திருக்கும் உடலுறவு நிகழ்வு கொஞ்சம் கடினமான உடல் இயக்கம் தான். நிபுணர்கள் இதனை உடற்பயிற்சி போன்ற நிகழ்வு என்கின்றனர். அதிலும் உடலுறவின் கணிசமான கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன. தம்பதிகளுக்குள் பாலியல் செயல்பாட்டின்போது ஒரு நிமிடத்திற்கு சுமார் 11 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். உடலுறவு நேரத்தை பொறுத்து 85 கி.கலோரி அல்லது 3.6 கி.கலோரிகள் ஒவ்வொரு நிமிடமும் எரிகிறது. ஆனால் யாருக்கு எடை அதிகம் குறையும் என நினைக்கிறீர்கள்? எப்படி குறைக்க முடியும்? அதை தொடர்ந்து பார்க்கலாம்.
எப்போதும் ஆண்கள் பெண்களை விட உடல் எடையும், வலிமையும் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். உடலுறவில் ஆண்களின் ஆற்றல் செலவினம் கூட பெண்களை காட்டிலும் அதிகமாக இருப்பதாக பல ஆய்வு அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. அதனால் இது மாதிரி உடல்ரீதியான பயிற்சிகள் ஆண்களுக்கு அதிக ஆற்றல் இழப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலுறவின் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் ஒரே நிலையை முயற்சிக்க கூடாது. பல்வேறு நிலைகளை முயன்று பார்க்கலாம். பெண்களுக்கு, உட்கார்ந்த நிலையில் உறவு கொள்ளும்போது 115 கலோரிகளுக்கு மேல் எரிகிறது. ஆண்களுக்கு வீல்பேரோ என்ற பொசிஷனில் 150 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மிஷனரி, ஈகிள், ஸ்பூனிங் போன்ற பொசிஷன்கள் குறைவான கலோரிகளை எரிப்பதாகவே கூறப்படுகிறது.
Image: Getty Images
உடலுறவில் ஈடுபடும் போது அதிகமாக கலோரிகளை குறைக்க வேண்டுமானால், அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட நேரம் உடலுறவு கொண்டால் அதிகமாக கலோரிகள் எரிக்கப்படும். இதனால் எடை இழப்புக்கு வாய்ப்பு ஏற்படும்.
Image: Getty Images
உடலுறவின் போது எரிக்கப்படும் கலோரிகளின் அளவு ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அவர்கள் கொள்ளும் பாலுறவின் தீவிரம், உடலுறவில் ஈடுபடும் நேரம், உடலுறவு முன்விளையாட்டின் காலம், உடலுறவு வைத்து கொள்ளும் நிலை ஆகிய காரணிகளைப் பொறுத்தது எடை இழப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.