உடலுறவில் தடையில்லாமல் இன்பம் பெற தம்பதிகள் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணும்! மீறினா ஆணுறுப்பு சுருங்கிடும்

First Published | Jun 4, 2023, 1:24 PM IST

உடலுறவு கொள்ளும்போது தம்பதிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம். 

உடலுறவில் ஈடுபடுவது தம்பதிகளை நெருக்கமாக மாற்றும். அவர்களுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால் உடலுறவு கொள்ளும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அந்த சுக அனுபவம் பல மாதங்கள் கூட நினைவில் தங்கும். இதை செய்ய தவறினால் உங்களுக்கு உடலுறவில் நாட்டம் குறையலாம். தாம்பத்தியத்தில் வெகுநேரம் இன்பம் காண இதை பின்பற்றுங்கள். 

ஆணுறுப்பு சுருங்கலாம்!!

படுக்கை அறையில் அலார்ம் கிளாக் மாதிரி திடீரென சத்தம் போடும் பொருட்களை வைக்காதீர்கள். இப்படி திடீரென ஒலி எழுப்பப்பட்டால் அந்த சமயம் உடலுறவில் சிக்கல் தான். உதாரணமாக பெண்ணுறுப்பின் உள்ளே சென்று வீரியமாக இயங்கும் ஆணுறுப்பு கூட சுருங்கலாம். 


இணைந்து குளியல் 

உடலுறவுக்கு முன் பல் துலக்கி, நன்றாக குளிப்பது மிகவும் நல்லது. குளிக்க நேரம் கிடைக்காவிட்டால் அந்தரங்க பாகங்களையாவது கழுவுங்கள். இணைந்து குளித்தால் இன்னும் உணர்வுகள் தூண்டப்படும். ஒருவரையொருவர் குளிப்பாட்டி விட்டால் தேகம் தீண்டினால் நெருக்கம் அதிகமாகும். 

உரையாடலும் கூடலும்!!

தம்பதிகள் உடலுறவு கொள்ளும் போது ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேச வேண்டும். உங்களுடைய துணையிடம் எந்த வார்த்தையும் பேசாமல் வெறுமனே உறவில் ஈடுபட்டால் உங்கள் மீது நாட்டம் ஏற்படாது. உறவு கொள்ளும் போது அவ்வப்போது பேசிக் கொண்டே செய்ய வேண்டும். மேலும் உறவு கொள்ளும் போது பயன்படுத்தும் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும். இவர் இருந்தால்தான் தம்பதிகள் முகம் சுளிக்காமல் உறவு கொள்ள முடியும். 

இதையும் படிங்க: பெண்கள் வயதான ஆண்களுடன் உறவு வச்சிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்..!! இந்த கொடுமைய ஷாக் ஆகாம படிங்க!!

ஆபாச படங்கள் வேண்டாம்!! 

உடலுறவு கொள்ளும் சமயங்களில் ஆபாச படங்களை பார்ப்பது தவிர்ப்பது நல்லது. அந்த மாதிரியான படங்களை பார்த்துக் கொண்டே உறவில் ஈடுபடும் போது கவனச் சிதறல் ஏற்படலாம். முழுமையான இன்பத்தை பெற முடியாமல் போகலாம். உடலுறவு முடிந்ததும் ஒருவரையொருவர் அன்பாக அணைத்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் அரவணைப்பை கொடுப்பதுதான் அடுத்த முறை தாம்பத்தியத்திற்கு உங்களை மகிழ்வுடன் அழைத்துச் செல்லும். உறவு முடிந்ததும் திரும்பிப் பார்த்துக் கொள்வது மனக்கசப்பை ஏற்படுத்தலாம். 

மொபைல் போனை தவிர்க்கவும்!!

நீங்கள் உடலுறவில் ஏற்படும் போது எந்த சத்தமும் உங்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மொபைல் போனை முடிந்தவரை அணைத்து வைப்பது நல்லது. ஏனென்றால் அதில் நோட்டிபிகேஷன் வரும் போதும், ரிங் அடிக்கும் போதும் உங்களுடைய கவனம் திசை திரும்பலாம். 

இதையும் படிங்க: காம சூத்ரா என்றால் வெறும் காமப் புத்தகம் இல்ல.. அதுல 'யோனி பொருத்தம்'னு முக்கியமான வேறொன்னு இருக்கு தெரியுமா?

Latest Videos

click me!