ஆண்மைக்கு அவமானம்..! படுக்கையறையில் இந்த தவறை செய்யும் ஆண்களை வெறுக்கும் பெண்கள்..நிபுணரின் அட்வைஸ்

First Published | Feb 14, 2023, 5:27 PM IST

தாம்பத்தியத்தில் ஆண்கள் எதை செய்யும்போது பெண்கள் விரும்புவதில்லை…நிபுணர் சொல்லும் அட்வைஸ் 

உடலுறவு கொள்ளும்போது ஆணுறுப்பு அளவை கூட பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சுத்தமான ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள். நல்ல வாசனை தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும், அழுக்கான கணவரை பெண்கள் விரும்புவதேயில்லை. கணவரின் அசுத்தமான நடவடிக்கையால் தாம்பத்தியத்தையே வெறுத்த வாசகியின் கேள்வியை இங்கு காணலாம். 

வாசகியின் கேள்வி: “எனக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. என் கணவர் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்துவதில்லை. இந்த பிரச்சனை அளவுக்கதிகமாக வளர்ந்து, அவருடன் உடலுறவு கொள்ள கூட நான் விரும்பாமல் விலகி கொண்டிருக்கிறேன். சுத்தமான ஆண் தான் எனக்கு பிடிக்கும். அவர் அதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். 

Tap to resize

கோடைகாலம் கூட பரவாயில்லை. குளிர்காலத்தில் அவர் சில நாட்கள் சுத்தமாக குளிப்பதை தவிர்க்கிறார். அவரின் உடல் துர்நாற்றம் குறித்து நான் தொடர்ந்து நச்சரித்தால் தான் குளிக்கவே செய்கிறார். திருமணமான புதிதில் பெர்ப்யூம் பயன்படுத்த ஒப்பு கொள்ளவைத்தேன். ஆனாலும் பெண்கள் மட்டுமே இப்படி செய்வார்கள் என அதையும் செய்யமாட்டேன் என விட்டுவிட்டார். தனிப்பட்ட சுத்தத்தை கடைபிடிப்பதுதான் ஆண்மைக்கு அவமானம் என விடாப்பிடியாக நம்புகிறார். அவர் மட்டுமல்ல, அவர் வீட்டில் பெரும்பாலான ஆண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவரை எப்படி மாற்றுவது? “என குழப்பமாக கேட்ட வாசகிக்கு நிபுணரின் பதிலை காணலாம். 

நிபுணரின் பதில்: தொடர்ச்சியான சின்ன விஷயங்களின் முரண் தான் உறவில் பெரும் ஏமாற்றம், சண்டைக்கு ஆதாரமாக மாறும். உங்கள் துணை உங்களை புரிந்து கொள்ளாதது தான் இந்த துயரத்திற்கு காரணம். தொடர்ந்து நீங்கள் மீண்டும் மீண்டும் சொன்னால் எரிச்சலை தான் உண்டாக்கும். அதற்குப் பதிலாக உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுங்கள். அதே நேரம் உங்களுடைய விரக்தியையும், வெறுப்பு, மகிழ்ச்சியின்மையை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கிடையே இடைவெளியை உண்டு செய்யும். 

முதலில் சின்ன விஷயத்தை சொல்லுங்கள். அதை செய்த பிறகு மெதுவாக அடுத்ததற்குச் செல்லுங்கள். பல ஆண்டுகளாக சுகாதாரத்தை பேணாத ஒருவரிடம், நீங்கள் மாற்ற சொல்லும்போது சிரமமாகத் தான் இருக்கும். கடந்த 6 ஆண்டுகளாக நீங்கள் அதற்காக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மாற வேண்டிய நபருக்கு கணிசமான நேரம் எடுக்கும். அதையும் புரிந்து கொள்ளுங்கள். 

கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்தியம் ரொம்ப முக்கியம். அதை சம்பிரதாயமாக சில ஆண்கள் நினைப்பதால் அவர்களுக்கு உடல் சுத்தம் குறித்த எண்ணம் இருப்பதில்லை. ஆனால் கலவியின் போது வாசனையாக இருப்பதையே பல பெண்கள் விரும்புகின்றனர். நல்ல வாசனை கலவியில் ஆர்வத்தை அதிகப்படுத்த வாய்ப்பை உருவாக்கும். கணவனோ, மனைவியோ தனிநபர் சுத்தம் முக்கியம். அதை புரிந்து நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: வீட்டுக்குள் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக உலாவும் மனைவி.. குழம்பி தவிக்கும் கணவன்.. நிபுணரின் பளீச் பதில்..

இதையும் படிங்க: கள்ள உறவு கூட ஒருவிதத்துல நல்லதுனு சொல்றாங்க... ஏன் தெரியுமா?

Latest Videos

click me!