உங்கள் திருமணத்திற்கு பிறகு, உங்கள் துணை வேறு ஒருவரின் வசீகரத்தால் ஈர்க்கப்படலாம். திருமணத்திற்கு பிறகு உங்கள் துணை வேறொரு உறவில் இருப்பது உங்கள் உறவை சீர்குலைக்கும். பிறருருடன் தொடர்பில் இருப்பது உங்கள் துணைக்கு மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கலாம். அப்படி, உங்கள் துணை வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிய வந்தால், முதலில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்ன என்பதை பார்ப்போம்.
நெருங்கிய நபருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:
உங்கள் நெருங்கிய நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நம்பிக்கை வைத்து உங்கள் உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அவர்களின் ஆலோசனையைப் பெறவும். இது நீங்கள் நன்றாக உணர உதவுவதோடு, அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் உங்களுக்கு வழிகாட்ட உதவும்.