தம்பதிகளே கவனமான இருங்க.. உங்கள் உறவை அழிக்கக்கூடிய மோசமான விஷயங்கள் இவைதான்...

First Published | Aug 23, 2023, 2:53 PM IST

சிலர் "மைன்ட் கேம்ஸ்" எனப்படும் ஏமாற்றும் உத்திகளைப் பயன்படுத்தி தங்கள் துணைக்கு அமைதியின்மையை ஏற்படுத்துகிறார்கள்.

மனித மனம் என்பது புரியாத புதிராக உள்ளது. சில நேரங்களில் அன்பின் சொர்க்கமாக இருக்கும் மனித மனம், சில நேரங்களில் உறவு சிக்கலால் அழிவை ஏற்படுத்தும் போர்க்களமாகவும் மாறிவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சிலர் காதல் அல்லது திருமண உறவுகளில் "மைன்ட் கேம்ஸ்" எனப்படும் ஏமாற்றும் உத்திகளைப் பயன்படுத்தி மேலாதிக்கத்தைப் பெற, அதிகார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த அல்லது தங்கள் துணைக்கு அமைதியின்மையை ஏற்படுத்துகிறார்கள். உங்கள் காதல் உறவை அழிக்கக்கூடிய மோசமான மைண்ட் கேம்கள் குறித்து பார்க்கலாம்.

சீரான மனநிலை

உங்கள் துணையை உயர்வாகவும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாம சீரான முறையில் பார்ப்பதன் மூலம் மனக்கசப்பு மற்றும் விரக்தியின் சுழற்சியில் இருந்து விடுபடலாம்..

Tap to resize

எதிர்மறையை தவிர்க்கவும்

மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறையைத் தவிர்ப்பது உறவில் மிகவும் முக்கியம், உங்கள் துணையை மோசமாக நினைப்பதை தவிர்த்துவிட்டு, நம்பிக்கையையும் நெருக்கத்தையும் மீண்டும் உருவாக்குங்கள்.

வெளிப்படையான பேச்சு

ஒருவேளை அப்படி இருக்குமோ அல்லது இப்படி இருக்குமோ என்பது போன்ற அனுமானங்களை நம்புவதற்குப் பதிலாக உங்கள் தேவைகளை வெளிப்படையாகத் தெரிவிக்கவும். இதன் மூலம் ஏமாற்றம் மற்றும் வெறுப்பைத் தடுக்க முடியும்
 

காயப்படுத்த வேண்டாம்

உங்கள் துணையின் நேர்மறையான குணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர்களுடன், நியாயமான மற்றும் மரியாதை முறையில் பேச முயற்சிக்கவும். அவர்களை புண்படுத்தும் நடத்தையைத் தவிர்க்கவும்

பழி போடுவதை நிறுத்த வேண்டும்

தேவையில்லாமல் உங்கள் துணை மீது பழிபோடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு பொறுப்பேற்பதன் மூலமும் பயனுள்ள தகவல்தொடர்புகளை வளர்ப்பதன் மூலமும் ஆரோக்கியமான உறவை வளர்க்கவும்.

அதிகப்படியான கற்பனை:

பாதுகாப்பின்மை மற்றும் அச்சங்களை நேருக்கு நேர் வெளிப்படையாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற நாடகம் மற்றும் பதற்றத்தை விடுவிக்கவும்.

ஏமாற்றம்:

நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு, உங்கள் உறவில் அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளும் அடித்தளத்தை உருவாக்குங்கள். உங்கள் துணையை மாற்ற வேண்டும் என்று நினைக்காமல் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Latest Videos

click me!