உங்கள் உறவை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல வேண்டுமா? அப்ப கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..

First Published | Aug 23, 2023, 1:26 PM IST

ஒவ்வொரு உறவும் வித்தியாசமானது, அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். 

உறவை எப்படி மேம்படுத்துவது?

ஒவ்வொரு காதல் உறவுவிலும் நிச்சயம் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மேலும் உங்கள் துணையுடனான உறவு எவ்வளவு புதியதாக இருந்தாலும், ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய செயல்கள் உள்ளன. நீங்கள் கடந்த கால உறவுகளில் தோல்வி அடைந்திருந்தாலும், அல்லது உங்கள் தற்போதைய உறவில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு போராடியிருந்தாலும் உங்களுக்கான செய்தி தான் இது.

நீண்ட உரையாடல்

ஒவ்வொரு உறவும் வித்தியாசமானது, அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.  2 வெவ்வேறு தனிநபர்கள் சந்திக்கும் சூழல், அவர்கள் ஒன்றாக இருக்கத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள். உறவு எப்படி இருக்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று ஒரே மாதிரியான பார்வையைப் பகிர்வது உறவை ஆரோக்கியமாக்கும் பண்புகளில் ஒன்றாகும். அதைத் தீர்மானிக்க ஒரே வழி உங்கள் துணையுடன் நீண்ட, நேர்மையான உரையாடல். ஆம். உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவதன் மூலம் அவர்களின் விருப்பம், ஆசை ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும்.

Tap to resize

உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது என்றால் என்ன?

ஈர்ப்பு மற்றும் மோகத்தின் முதல் கட்டங்களுக்குப் பிறகு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதாகும். இது பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு உணர்வு மற்றும் பகிரப்பட்ட எதிர்கால பார்வை ஆகியவற்றை வளர்க்கும். பயனுள்ள தொடர்பு, ஒருவருக்கொருவர் மரியாதை, மற்றும் ஒரு ஜோடியாக மாறி வளர விருப்பம் ஆகியவை உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவசியம்.

தரமான நேரத்திற்கு முன்னுரிமை

ஒரு நாளைக்கு ஒரு சில நிமிடங்கள் இருந்தாலும், அந்த நேரத்தை ஒருவருக்கொருவர் அர்ப்பணிக்கவும். ஒன்றாக இருங்கள் நீங்கள் இதுவரை செய்யாத புதிய, வேடிக்கையான செயலை செய்ய முயற்சிக்கவும்.

சிறிய விஷயங்கள் கூட உறவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் துணையிடம்  "நன்றி" அல்லது "ஐ லவ் யூ" அல்லது தவறு செய்தால் Sorry சொல்வது ஆகியவை உறவில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

உறவில் தகவல்தொடர்பு முக்கியமானது,உங்கள் உணர்ச்சித் தொடர்பை வலுப்படுத்த ஆழமான உரையாடல்களை தொடங்க வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவுடன் இருப்பது, புதிய விஷயங்களை ஒன்றாக கற்றுக்கொள்வது, வெளிப்படையாக இருப்பது உறவை வலுப்படுத்த உதவும்.

இதுபோன்ற சிறய விஷயங்கள் கூட உங்கள் உறவில் நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது உங்கள் தொடர்பை ஆழமாக்குவதுடன், பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு ஆகியவற்றின் உணர்வையும் வளர்க்கிறது.

Latest Videos

click me!