தவறுகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்:
உங்கள் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் தவறுகளை மட்டும் செய்து, அவற்றைச் சரி செய்யாமல் திரும்பத் திரும்ப உங்களிடம், மன்னிப்பு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தால், விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.
பொறுப்புகளை சமமாக பகிர்ந்து கொள்ளுங்கள்:
உங்கள் உறவில் இருவரும் பொறுப்பை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும், குறிப்பாக அது திருமணமாக இருந்தால். எல்லா சுமையும் ஒருவர் மீது இருக்க முடியாது. எனவே, பொறுப்புகள் எல்லாவற்றையும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நேர்மையாக இருங்கள்:
பொய்கள் உங்கள் உறவை மோசமாக்கும். பொய்கள் நம்பகத்தன்மையைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணை சொன்னது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இருவரும் பேசி சமரசம் செய்து கொள்ளுங்கள்.