இனிக்க இனிக்க தாம்பத்தியம்! கொஞ்சம் தேன் போதும்.. இப்படி செய்தால் பகல்ல கூட உங்க ஞாபகம் இருக்கும்!!

First Published | Feb 8, 2023, 4:31 PM IST

தாம்பத்தியத்தில் செய்யும் முன்விளையாட்டை (foreplay) உணவுகளை கொண்டு சுவாரசியமாக்கலாம். சில செக்ஸ் சீக்ரெட்ஸ் இதோ!!  

பாலுணர்வை தூண்டக்கூடிய பல உணவு பொருட்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் உடலுறவுக்கு முன்னர் உணவுகளை பயன்படுத்தி துணையுடன் உல்லாசமாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள். 

'காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா' என்பதில் தொடங்க வேண்டும் தாம்பத்தியம். இரவில் மனைவிக்கு அல்வா கொண்டு வரும் பின்னணி கூட இப்படி தொடங்கியது தான். 'செல்லமே' படத்தில் ரீமா சென், விஷாலுக்கு ஊட்டிவிடும் காட்சி வரும். ஒவ்வொன்றையும் ரீமாசென் ஊட்ட அதற்கு விளக்கம் கொடுத்தபடியே, ரொமான்ஸ் தொடங்கும். அதுமாதிரி உங்களுக்கு சில ஐடியா...

Tap to resize

இருவரில் ஒருவரின் கண்ணை கட்டி கொள்ளலாம். முன்விளையாட்டாக அனைத்து புலன்களையும் அலர்ட்டாக வைத்து கொண்டு காதல் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். உங்களுடைய துணைக்கு பிடித்த இனிப்பு வகை, பழங்கள் ஆகியவற்றை ஊட்டலாம். அதை கண்டுபிடிக்க சொல்லலாம். இடையிடையே உரையாடலாம். அவர்களது பாலுணர்வைப் தூண்டும் சில தொடுதல்களை செய்யலாம். காதினில் மெல்ல பேசி கூச செய்யலாம். நிலை குலைந்துவிடுவார்கள். 

கிண்ணத்தில் எடுத்து தேனை உண்ணலாம். ஆனாலும் படுக்கையறையில் கிண்ணம் எதற்கு? உங்களுடைய துணையின் உடலை தட்டாக நினைத்து கொள்ளுங்கள். துணையின் அங்கங்களில் தேனை ஊற்றி சுவைத்து பார்க்கலாம். தேனை உதட்டோடு உதடாக பரிமாறி கொள்ளலாம். தேன் முத்தங்களால் துணையை கொண்டாடலாம். தாம்பத்தியம் இனிக்கும்! 

வாய்வழி உடலுறவின் போதும் உணவை முக்கியமாக உபயோகிக்கலாம். உங்கள் துணையை பாலியல் மனநிலைக்கு கொண்டு வர, இந்த பாலியல் விளையாட்டை விளையாடலாம். சுவாரசியமான கேள்வி, பதில் விளையாட்டு கூட இதில் அடங்கும். கட்டிலில் கொஞ்சம் உரையாடும் பழக்கத்தை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள். தாம்பத்தியம் இனிக்கும். 

இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஸ்பீடா? ம்ஹூம்... மெல்ல தீண்டும் விரல் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.. நிபுணர் அட்வைஸ்

இதையும் படிங்க: சலிக்காம தாம்பத்தியத்தில் கிக் இருக்கணுமா? இரவில் இந்த விஷயங்களை மட்டும் பண்ணி பாருங்க..

Latest Videos

click me!