கணவரோடு உறவு கொள்வதை விட சுயஇன்பம் மேல தான் ஆர்வமா இருக்கு, அப்ப கருத்தரிக்க முடியாதா? வாசகிக்கு நிபுணர் பதில்

First Published | Feb 21, 2023, 7:25 PM IST

சுய இன்பம் செய்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையுமா? நிபுணரின் பதில்..

கணவனும், மனைவியும் குறிப்பிட்ட நாள்களில் ஒன்றாக இருந்தால் தான் கரு உருவாகும். அதற்கு தொடர்ச்சியான உடலுறவு அவசியம். ஆனால் சுய இன்பம் கருத்தரிப்பதில் சிக்கலாக வந்து நிற்குமா என்ன? வாசகியின் கேள்வி இதோ... எனக்கு கல்யாணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகுது. என் கணவர் கூட உடலுறவு திருப்தி தான். ஆனாலும் எப்போதும் சுய இன்பத்தில் எனக்கு நாட்டமாக இருக்கிறது. இதனால் எனக்கு கருத்தரிப்பில் சிக்கல் ஏதும் வருமா? குழப்பத்துடன் கதையை முடிக்கிறார் வாசகி. அவருக்கு நிபுணரின் பதில்.. 

நிபுணரின் பதில்: பாலியல்ரீதியான அளாதி இன்பத்தை பெறவும், பாலியல் ஆசையை திருப்தி செய்யவும் ஒரு நபர் தனக்கு தானே செய்யும் செயல் தான், சுய இன்பம். இதனால் சில பரவும் பாலியல் நோய்கள் வராமல் தடுக்கலாம். துணை இல்லாதவர்களுக்கு சுய இன்பம் நல்ல வடிகால். சுய இன்பம் முழுக்க பாதுகாப்பான விஷயம் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

Tap to resize

பொதுவாக சுய இன்பம் கருவுறுதலில் பாதிப்பை உண்டாக்காது. இருந்தாலும், குழந்தைபேறு வேண்டுவோர் உடலுறவில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவுகள் கிடைக்கும். வாரத்தில் நான்கு நாட்களாவது உடலுறவு வைத்தால் தால் குழந்தை பிறப்பு சாத்தியம் 83% வரை இருக்கும். 

இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. உஷார்! உல்லாசமாக இருக்க நினைத்து.. வாழ்வை இழந்தவர்களின் நெஞ்சை உலுக்கும் நிஜ கதைகள்...

குறிப்பாக மூன்று நாட்கள் உடலுறவு வைப்பது குழந்தை பிறக்கும் சாத்தியத்தை 67% அதிகரிக்கிறது. நாள்கள் குறையும் போது குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைகிறது. ஒருவேளை வாரம் 2 நாட்கள் உடலுறவு கொள்ளும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு 36% குழந்தை பிறக்கும் வாய்ப்பு தான் இருக்கும். குழந்தை பிறப்பை எதிர்நோக்கினால் தினமும் அல்லது அடிக்கடி உடலுறவு வையுங்கள். 

சுய இன்பம் பக்கவிளைவை உண்டுபண்ணாவிட்டாலும், உடலுறவில் ஆர்வத்தை குறைத்தால் குழந்தைப்பேறு வாய்ப்பு குறையும் வாய்ப்புள்ளது. அதனால் அடிக்கடி உடலுறவு வையுங்கள். உடலுறவின் மீது நாட்டம் ஏற்பட பாலியல் உறவு குறித்த புத்தகங்களை படியுங்கள். அதிக இன்பம் தரும் வெவ்வேறு நிலையில் உறவு கொள்ளுங்கள். துணையுடன் நேரம் அதிகம் செலவிடுங்கள். உடலுறவில் முன்விளையாட்டுகளில் ஈடுபட்டால் ஆர்வம் அதிகமாகும். மேலும் தகவலுக்கு பாலியல் மருத்துவரை அணுகி கூட ஆலோசனை பெறலாம். 

இதையும் படிங்க: ஒருவர் மீது பாலியல் ஈர்ப்பு வர இப்படி கூட காரணம் இருக்குமா?

Latest Videos

click me!