நல்ல வாசனையா இருக்கும்.. ஆனாலும் உடலுறவுக்கு முன் இதை மட்டும் பண்ணவே கூடாது.. ஏன் தெரியுமா?

First Published | Feb 8, 2023, 6:57 PM IST

முழு திருப்தி கிடைக்க வேண்டும் என்றால் உடலுடறவுக்கு முன் செய்யக் கூடாத சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். 

காதலில் முத்தமிடுவது, பாலியல் உறவு கொள்வது இயல்பானது. இதனால் அன்பு அதிகரிக்கும். முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது ஒருவருக்கொருவர் பிணைப்பை பலப்படுத்தும். பல நேரங்களில், நீங்கள் உங்கள் துணையை எவ்வளவு நேசித்தாலும், முத்தமிடுவதும் உடலுறவு கொள்வதும் சிரமமாக இருக்கும். அதற்கு உங்கள் மேல் வரும் துர்நாற்றம் தான் காரணமாக இருக்கும். உங்களுடைய வாயிலிருந்து மோசமான வாசனை உதட்டு முத்தங்களை தடை செய்யும். இதனால் சில சூயிங்கம் மெல்கிறார்கள். ஆனால் அதை தவறு என நிபுணர்கள் கூறுகின்றனர். அதை ஏன் என இங்கு தெரிந்து கொள்ளலாம். 

நீங்கள் திருப்தியான பாலியல் உறவோடு உங்களுடைய இரவைக் கழிக்க திட்டமிட்டால், சூயிங்கம் மெல்ல வேண்டாம். சூயிங்கம் மோசமான வாய் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அதை மென்று தின்னும்போது காற்று வயிற்றுக்குள் நுழையும். இதனால் வாவு பிரச்சனை வரலாம். சுயிங்கம் மெல்லும்போது காற்று வயிற்றுக்குள் நுழைவதால், உணவு உடலுக்குள் நுழைவதாக செரிமான நொதிகள் உணரும். இதனால் வயிற்றில் வாயு நிறைகிறது. இதன் காரணமாக இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும். இது பாலியல் செயல்பாடுகளில் தலையிடும். பின்னர் வாயைத் தவிர மற்ற இடங்களிலிருந்தும் மோசமான வாசனை வரத் தொடங்கும். 

Tap to resize

சூயிங்கத்தில் ஏராளமான புதினா பொருள்கள் உள்ளன. இவை பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படும். இதனால் பாலியல் ஆர்வம் குறைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக முழுமையாக பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போகலாம். 

சூயிங்கத்தில் சில ப்ரிசர்வேட்டிவ்கள், செயற்கை சர்க்கரை உள்ளன. இவை ஒவ்வாமையை உண்டாக்கும். இதனால் பற்களும் பாதிப்பை அடையும். சுயிங்கத்தில் உள்ள மெத்தோல், சர்பிடால் ஆகிய செயற்கை இனிப்புகள் குடல் எரிச்சலை ஏற்படுத்த வல்லவை. 

சூயிங்கம் மென்று பழகுபவர்கள் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் அதிகமாகிறது. சுயிங்கம் மென்று தின்னும்போது வாயின் பெரும்பாலான தசைகள் செயல்படுவதால், மற்ற உணவை சாப்பிடும்போது சிரமமாக இருக்கும். இதனால் தாடை, மண்டை ஓட்டை இணைக்கும் தசைகளில் கூர்மையான வலி ஏற்படும். சூயிங்கம் தலைவலி, அலர்ஜி ஆகியவற்றை ஏற்படுத்தும். 

உங்களுடைய வாயில் இருந்து துர்நாற்றம் வருவதால் பாலுறவு இன்பம் கெட்டுப் போவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு தீர்வு சூயிங்கம் கிடையாது. உங்கள் துணையை முத்தமிடுவதற்கு முன் தினமும் பல் துலக்குங்கள். நல்ல மவுத்வாஷை பயன்படுத்தலாம். நிறைய தண்ணீர் அருந்தினால் வாயில் மோசமான வாசனை வரவே வராது. ஒரு துண்டு ஆப்பிளை சுவைத்து விட்டு முத்தமிட்டால், உங்களுடைய துணை சொக்கி போவார்கள். 

இதையும் படிங்க: இனிக்க இனிக்க தாம்பத்தியம்! கொஞ்சம் தேன் போதும்.. இப்படி செய்தால் பகல்ல கூட உங்க ஞாபகம் இருக்கும்!!

இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஸ்பீடா? ம்ஹூம்... மெல்ல தீண்டும் விரல் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.. நிபுணர் அட்வைஸ்

Latest Videos

click me!