90'ஸ் கிட்ஸ்: 90ஸ் கிட்ஸ்களின் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போவதற்கான காரணங்கள் இவைகள் தான்!

First Published | Apr 8, 2023, 8:59 AM IST

கணவன் மனைவி தங்களுடைய தாம்பத்யத்தை மகிழ்ச்சியூட்டும் விதத்தில் மாற்ற்றுவதற்கு சில புதிய விஷயங்களை ட்ரை செய்ய வேண்டும்.அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

இன்றைய இளம் தம்பதியினரில் அதிகமான தம்பதியினருக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கையில் ஒரு திருப்தியில்லாமையும் மகிழ்ச்சியில்லாமையும் உள்ளது. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் செக்ஸ் வாழ்க்கையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இருவரும் சமமாக படித்திருப்பதாலும் , வேலைக்கு செல்வதாலும் அவர்களின் ஆளுமை தான் இருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் அதிகரித்தே காணப்படுகிறது.

இது கணவன் மனைவிக்கும் இடையே உள்ள அன்பையும், நெருக்கத்தையும், குறைத்து ஒரு பெரிய அளவிலான இடைவெளியை உண்டாக்கி விடும். கணவன் மனைவி தங்களுடைய தாம்பத்யத்தை மகிழ்ச்சியூட்டும் விதத்தில் மாற்ற்றுவதற்கு சில புதிய விஷயங்களை ட்ரை செய்ய வேண்டும்.அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

நெருக்கம் குறைவது:

ஒரு சிலருக்கு தாம்பத்யத்தில் சலிப்பு உண்டாவது எனில் அது அவரின் செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்களில் அதிருப்தி மற்றும் ஆர்மம் இல்லாமல் இருக்கும் உணர்வை சொல்கிறது. இப்படியான நெருக்கம் குறையத் தொடங்கும் போது உறவில் சிறு விரிசல் உண்டாகும் சூழல் எழும். இது தம்பதியினருக்கு நல்லதாக அமையாது.

இந்த விரிசல் தம்பதிகளின் பாலியல் உறவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவி வெகு நாட்களாக செக்ஸ் செய்து கொள்ளாமல் இருந்தால் அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள அவர்களை நீங்க கட்டாயப்படுத்தினால் ,அது அலுப்பான தாம்பத்ய வாழ்க்கையின் சிம்டமாக இருக்கலாம்.

அப்படி தாம்பத்ய வாழ்வில் சலிப்பு உண்டாகும் போது உங்களுடைய நெருக்கம் குறையத் தொடங்கி , தம்பதிகளுக்குள் இருக்கின்ற உணர்ச்சித் தொடர்பை குறைக்கும். செக்ஸில் நாட்டம் குறைந்து காணப்படும் போது , உடலுறுவு கொண்டால் அது திருப்தியற்ற மற்றும் நிறைவான மகிழ்ச்சியை ஒரு போதும் தருவதில்லை.

செக்ஸில் இன்பம் குறைவது:

உடலுறுவு செய்யுது கொள்ளும் போது எப்போதும் மகிழ்வான ஒரு மன நிலையில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபடும் போது தான் திருப்தி கிடைக்கும். தவிர இந்த செக்ஸ் அவர்களின் உறவை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மேம்படுத்தும் .

செக்ஸ் எப்போதும் போல் ஒரு பணி என்று கருதி செய்தால் அது நிச்சயம் சலிப்புத் தன்மையை தான் உண்டாக்கும் . இப்படி சலிப்புடன் செய்யப்படுகின்ற செக்ஸில் தம்பதிகளின் இன்பத்தையும், ஆர்வத்தையும் குறைத்து விடும்.

Tap to resize

இந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் டாய்ஸ் அல்லது வேற விதமான உறவுகளை தேடத் தொடங்குவார்கள். அப்படியான சூழ்நிலைகளை தடுக்க பலவிதமான வழிகளில் உங்கள் தாம்பத்ய வாழ்வை நீங்கள் மெருகேற்ற வேண்டும் .

செக்ஸில் ஆர்வம் இல்லாமை:

செக்ஸில் நாட்டமில்லாமல் அலுப்பான தாம்பத்ய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள், செக்ஸில் ஆர்வத்தை இழப்பதால் உறவு தொடர்வதில் பிரச்சனைகள் எழுகிறது.

உடல்நலப் பிரச்னை, டிப்ரஷன்,அதிக வேலைப் பழு ஆகியவற்றால் கூட செக்ஸில் ஆர்வம் குறையும் நிலை உண்டாகலாம். இது உங்களின் வருங்காலத்தையும் சேர்த்தே பாதிக்கும்.

மன இறுக்கம்:

மனஇறுக்கமான உறவுகள் இருப்பின் அது சலிப்பான மற்றும் கட்டாயமான தாம்பத்ய வாழ்விற்கு தீர்வு காணப்படாவிட்டால், அது உறவுகளில் விரிசல், மன உளைச்சல், சண்டை மற்றும் சச்சரவுகளை ஏற்படுத்தும். உறவில் உண்டாகும் மோதல்கள் டிப்ரஷநாய் மேற்கொண்டு அதிகரித்து நிரந்தர பிரிவு வரை வழிவகுக்கிறது.

உடல் தோற்றத்தை எண்ணி தாழ்வு:

உடல் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையினால் அவர்கள் தங்கள் செக்ஸ் செயல்திறன் அல்லது கவர்ச்சி பற்றி எதிர்மறையான சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும்
வைத்திருக்கலாம்.

இது ஒருவரின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதையை குறைக்கும் தன்மையை ஏற்படுத்தும். அவர்களின் உடல் பற்றி அவர்களாகவே தாழ்ந்து நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாகவே பலரம் செக்ஸில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர். அப்படியே செக்ஸில் ஈடுபட்டாலும் தங்களை முழு ஈடுபாடுடன் வைத்துக் கொள்ள தயங்குகின்றார்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம்:


செக்ஸில் உடல் மற்றும் மன ஆரோக்கியமானது ஒரு மையப் புள்ளியாக உள்ளது. உடல்நலக் கோளாறுகள் அல்லது மனதில் குழப்பங்கள் இருப்பின் அதனை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.

இது உங்கள் ஒட்டு மொத செக்ஸ் வாழ்வை பாதிக்கும் . தவிர பிற காரணங்களான மன கசப்பு, மன இறுக்கம், தாம்பத்ய சலிப்பு , பதட்டம் போன்றவையால் உடல் ஆரோக்கியத்தில் பல விதமான எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கும்.

அக்ஷய திருதியை 2023: தங்கம் தான் வாங்கணும்னு இல்ல!இந்த பொருட்கள் வாங்கினாலும் வற்றாத செல்வம் கிடைக்கும்.

Latest Videos

click me!